வாட்ஸ் அப்-பில் அப்டேட் என்னென்ன வந்திருக்குது? வரப் போவுது-ன்னு தெரியுமோ?

வாட்ஸ் அப்-பில் அப்டேட் என்னென்ன வந்திருக்குது? வரப் போவுது-ன்னு தெரியுமோ?

‘வாட்ஸ் அப்’ என்னும் நவீன தகவல் தொடர்பு சாதனத்தின் வளர்ச்சி பிரமிப்பு அடையை வைக் கிறது. உலகின் எந்த பகுதியில் ஒரு நிகழ்வு நடந்தாலும் அதனை படத்துடன் உடனே பரிமாறிக் கொள்ளும் இந்த வசதி நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள் வரை வெகுவாக சென்றடைந்துள்ளது.

whatapp mar 29

செல்போன் மூலம் ‘வாட்ஸ் அப்’ வசதியை பயன்படுத்துவதற்கு தற்போது கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை. முற்றிலும் இலவசமாக்கப்பட்ட இந்த வசதியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனிடையே வாட்ஸ் அப் வசதி தற்போது செல்போன்களுக்கு இடையே மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. விரை வில் வாட்ஸ் அப்பில் இருந்து தரை வழி போன்களுக்கும் (டெலிபோன்) பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

போன வாரமே வாட்ஸ் அப் செயலியில், புதிய சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் அமைக்கப்படும் டெக்ஸ் ட்களில், இனி, அழுத்த மற்றும் சாய்வு என (bold and italic) என டெக்ஸ்ட் எழுத்துகளை வடிவமைக் கலாம். எந்த டெக்ஸ்ட்டை அழுத்தமாக (bold) ஆக அமைக்க வேண்டுமோ, அதன் முன்னும் பின்னும் asterisk குறியீட் டினை அமைத்தால் போதும். எழுத்துகள் அழுத்தமாகக் காட்சி அளிக்கும். சாய்வான அமைப்பு வேண்டும் என்றால், அதே போல முன்னும் பின்னும் அடியிடைக் கோடு (underscore) அமைக்க வேண்டும். இனி உங்களுக்கு நோட்டி பிகேஷன் என்னும் அறிவிப்பு செய்தி வருகையில், அனுப்பியவரின் பெயர் அழுத்தமாக (Bold) ஆகக் காட்டப்படும்.

இதற்கு வாட்ஸ் அப் பதிப்பின் புதிய பதிப்பு (WhatsApp (2.12.535)) பதியப்பட்டு இயக்கத்தில் இருக்க வேண்டும். டாக்குமெண்ட் களைப் பகிர்ந்து கொள்வதிலும், வாட்ஸ் அப் செயலி புதிய வசதிகளைத் தருகிறது. கூகுள் ட்ரைவ் மற்றும் மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவ் போல்டர்களில் உள்ள டாக்கு மெண்ட்களை ஆய்வு செய்து தேர்ந்தெடுக்க, புதியதாக ‘Browse other docs’ என்னும் வசதி ஆப்ஷ னாகத் தரப்படுகிறது. இவற்றிலிருந்து, PDFs, Docs, Sheets மற்றும் பிற பைல்களைத் தேர்ந்தெடுக்க லாம். இவை அனுப்பப்படும் முன்னர், பி.டி.எப்.பைலாக மாற்றப்பட்டு அனுப்பப்படும்.

இதனிடையேதான் 4ஜி நெட்ஒர்க் வசதியுள்ள ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் லேண்ட் லைனுக்கு பேசும் வசதியை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத் தின் முகேஷ் அம்பானி வாட்ஸ் அப்பில் இருந்து டெலிபோனுக்கு பேசும் வசதியை செயல்படுத்த தீவிரம் காட்டுகிறார்.

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் டெலிபோன்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் டெலிபோன்களில் இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் டெலிபோன் பயன் படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ‘டிராய்’ முடிவு செய்து இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.இதனால் டெலிபோன் சரண்டர்களை குறைப்பதோடு புதிய இணைப்புகளுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று பி.எஸ்.என்.எல். கருதுகிறது.

இந்த புதிய வசதிகளை சோதனை முறையில் மேற்கொண்டு பார்க்க, https://play.google.com/apps/testing/com.whatsapp என்னும் தளம் சென்று, பதிவு செய்து கொள்ள வேண்டும்

error: Content is protected !!