வங்கி கணக்கு ஆரம்பிக்க ஆதார் அட்டை மடடும் போதுமாம்!

வங்கி கணக்கு ஆரம்பிக்க ஆதார் அட்டை மடடும் போதுமாம்!

ஆதார் அட்டையை பயன்படுத்துவதன் மூலம் நாட்டில் தற்போது நிலவி வரும் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள நிலையில் ‘வங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை இருந்தால் போதும். வேறு எவ்வித விண்ணப்ப படிவங்களையும் நிரப்ப தேவையில்லை; என ஆதார் அடையாள அட்டை வழங்கும் அமைப்பின் தலைவர் நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.
25 -_adhar card
இது குறித்து அவர் “ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் வங்கிகளில் கணக்கு துவக்க விண்ணப்ப படிவம் எதையும் நிரப்பத் தேவையில்லை. வங்கிக்கு சென்று அங்குள்ள கம்ப்யூட்டரில் ஆதார் அடையாள அட்டையை சொருகினால் போதும்; அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் வங்கிக் கணக்கு துவக்கும் பிரிவுக்கு மாறிவிடும்.எனினும் அடையாளத்தை உறுதி செய்வதற்காக விண்ணப்பதாரர் தன் கைரேகையை பதிவு செய்வது கட்டாயமாக இருக்கும். அட்டை வைத்திருப்பவர் தொடர்பான அனைத்து தகவலும் அந்த அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதால் கூடுதலாக எதையும் தர வேண்டிய அவசியம் இல்லை.” என்று அவர் கூறினார்.

Now, open a bank account through Aadhaar without paperwork
*************************************************************************
The Unique Identification Authority of India (UIDAI) has enabled a feature that would allow anyone with an Aadhaar number to open a bank account, without any paperwork.Axis Bank was the first lender to start the electronic know-your-customer (e-KYC) facility, which would facilitate Aadhaar-registered individuals to step into a branch and open an account, merely by providing his/her unique identification number, after which the person’s fingerprints would be scanned.

error: Content is protected !!