ரெயில்வே துறைக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு- இரும்பு ஏற்றுமதியில் முறைகேடு!

ரெயில்வே துறைக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு- இரும்பு ஏற்றுமதியில் முறைகேடு!

ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு என அடுக்கடுக்கான ஊழல் புகார்களில் சிக்கி தவிக்கும் மத்திய அரசு மீது புதிதாக ரெயில்வே துறை மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரும்பு எடுத்துச் செல்வதை விட ஏற்றுமதியாகும் இரும்புக்கு விலை குறைக்கப்பட்டது. இதன்மூலம் ஏற்றுமதி நிறுவனங்கள் பெரும் லாபம் அடைந்தன. ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதன் மூலம் ரெயில்வே துறைக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 26–ந்தேதி வரை ரெயில்வேயின் ஆவணங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் இழப்பு ரூ.50 ஆயிரம் கோடி வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
sep 8 - rail fire
ரெயில்வே துறையானது இரும்பு ஏற்றுமதியில் இரட்டை விலை முறையை கடந்த 2008–ம் ஆண்டு மே 22–ந்தேதி அறிமுகப்படுத்தியது.அதன்படி உள்நாட்டில் இரும்பு எடுத்துச் செல்வதை விட ஏற்றுமதியாகும் இரும்புக்கு விலை குறைக்கப்பட்டது. இதன்மூலம் ஏற்றுமதி நிறுவனங்கள் பெரும் லாபம் அடைந்தன. ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரெயில்வே துறைக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 26–ந்தேதி வரை ரெயில்வேயின் ஆவணங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் இழப்பு ரூ.50 ஆயிரம் கோடி வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ரெயில்வே, தென் மேற்கு ரெயில்வே, கிழக்கு கடற்கரை ரெயில்வே மண்டலங்களில் 2008 மே முதல் 2012 மார்ச் வரை நடந்த இரும்பு ஏற்றுமதி தொடர்பான கணக்கு தணிக்கையின் போது இந்த முறைகேடு நடந்து இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் 126 நிறுவனங்கள் இரும்பு ஏற்றுமதிக்கான முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. இந்த நிறுவனங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமலேயே உள்நாட்டு விலைக்கே அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் 258.38 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதே போல் 290 நிறுவனங்கள் முழுமை பெறாத ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளன. அவற்றுக்கு உள் நாட்டு விலைக்கு இரும்பு ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2090.15 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தென் கிழக்கு ரெயில்வேயில் மட்டும் இந்த முறைகேடு நடந்துள்ளது.முழுமையான ஆவணங்கள் தாக்கல் செய்யாமலும், அரைகுறையாக ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட வகையில் நடந்த முறை கேட்டில் 2343.53 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கணக்கு தணிக்கை துறையின் இந்த புதிய குற்றச்சாட்டால் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஊழல் பெரும் புயலைக் கிளப்பியது. இந்த ஆண்டு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு பிர்சசினை எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பியதால் பாராளுமன்றம் ஸ்தம்பித்தது நினைவு கூற்ததக்கது..

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு நடந்தபோது அந்த இலாகாவை பிரதமர் மன்மோகன் சிங் கவனித்து வந்தார். எனவே அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.இப்போது ரெயில்வேயிலும் பூதாகரமான முறைகேடு கிளம்பியுள்ளது. அடுத்த ஆண்டு பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அடுத்தடுத்த ஊழல் புகார்களால் காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

CAG unearths Rs 17,000 crore scam in railways
********************************************************************
The UPA government is staring at yet another massive scandal that has resulted in the state exchequer losing thousands of crores.A test audit by the comptroller and auditor general (CAG) of the railway’s dual policy for transportation of iron ore has confirmed widespread suspicion that exporters have been blatantly misusing the policy. A multi-disciplinary investigation team, led by the Central Bureau of Investigation (CBI), is already investigating some of these cases, and TOI has been reporting over the past year about the scandal.

Related Posts

error: Content is protected !!