ரயில்களில் ட்ரெயின் ஹோஸ்டஸ்!- பாரத் எக்ஸ்பிரஸில் மீண்டும் அமல்!

ரயில்களில் ட்ரெயின் ஹோஸ்டஸ்!- பாரத் எக்ஸ்பிரஸில் மீண்டும் அமல்!

டெல்லி – காசி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலில் விமானங்களைப் போன்று பணிப்பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

விமானங்களில் பயணிகளுக்கு சேவை வழங்க ஏர் ஹோஸ்டஸ் இருப்பதைப் போன்று டெல்லி – காசி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலில் இதே போன்று 34 பணிப்பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

சோதனை முயற்சியாக வந்தே பாரத் விரைவு ரயிலில் நடைபெறுகிறது. அப்பணிப்பெண்களுக்கு மாதம் ரூ. 25,000 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டால் மற்ற ரயில்களிலும் இதுபோன்ற பணிப்பெண்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக இந்தியாவில் அதிவேக ரயிலாக இதுவரை சதாப்தி ரயில் இருந்து வந்தது. தற்போது இதனை மிஞ்சும் வகையில் மணிக்கு 160 கிமீ தூரத்தை கடக்கும் கதிமான் ரயில் வடிவமைக்கப்பட்டு அதில் இதே டைப்பிலான பணி பெண்கள் நியமிக்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!