“ரத்தக்கறை படிந்த கரம்’- குறித்து மோடி பதிலை ஏற்க இயலாது!-தேர்தல் ஆணையம்!

“ரத்தக்கறை படிந்த கரம்’- குறித்து மோடி பதிலை ஏற்க இயலாது!-தேர்தல் ஆணையம்!

காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை “ரத்தக்கறை படிந்த கரம்’ என்று பேசியது தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அளித்த விளக்கத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதுடன் எதிர்காலத்தில் பொதுக்கூட்டங்களில் பேசும்போது மேலும் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள் என்றும் எதிர்பார்க்கிறோம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
nov 22 - modi_
சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த வாரம் பாஜவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் குறித்து “ரத்தக் கறை படிந்த கரம்’ என்று சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக அவர் மீது காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்திருந்தது. இதுகுறித்து நவம்பர் 16ம் தேதிக்குள் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் மேலும் ஒரு வாரம் அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் பாஜ கோரிக்கை விடுத்து.பின்னர் மோடி அளித்த விளக்கத்தில் “பொதுமக்கள் பேச்சு வழக்கில் இயல்பாகக் கூறும் வார்த்தைகளையே நான் பயன்படுத்தியிருந்தேன்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விளக்கத்தை ஏற்க தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை மறுத்தது. மோடிக்கு 3 பக்க உத்தரவை அனுப்பி வைத்தது. அதில்,”அரசியல் எதிரிகளை “ரத்தக்கறை படிந்த கரம்’ என்பது போன்ற வார்த்தைகளால் குறிப்பிட்டுப் பேசுவது, அரசியல் நடைமுறைகளுக்கு ஊறு விளைவிப்பதாகவே கருதப்படும்.

இந்த விவகாரத்தின் சந்தர்ப்ப சூழ்நிலை, தாங்கள் அளித்துள்ள விளக்கம் ஆகியவற்றை ஆராய்ந்ததில், தங்களின் பதிலை ஏற்க இயலாது என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. விளக்கத்தில் தாங்கள் அளித்துள்ள உறுதிமொழியைக் கடைபிடிப்பீர்கள் என்றும் எதிர்காலத்தில் பொதுக்கூட்டங்களில் பேசும்போது மேலும் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Election Commission rejects Modi’s argument on ‘khooni panja’ remark
*********************************************************************
In a strong disapproval of the language used by BJP’s prime ministerial candidate Narendra Modi a fortnight ago, the Election Commission on Thursday told him to be “more careful” with his choice of words, stressing that the expressions should be couched in terms that conform to “dignity, decorum and public morality”.

Related Posts

error: Content is protected !!