செய்திதாள்கள் மூலமாக செடி வளர்க்கலாமே !- ஜப்பான் டெக்னாலஜி -வீடியோ

செய்திதாள்கள் மூலமாக செடி வளர்க்கலாமே !- ஜப்பான் டெக்னாலஜி -வீடியோ

காகிதத் தயாரிப்புக்காக மரங்கள் வெட்டப்படுவதை, இதற்கு நல்ல உதாரணமாகக் கூறலாம். காகிதத்துக்காக காடுகளில் ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. இதைத் தடுப்பதற்காக உருவான தொழில்நுட்பமான “மறுசுழற்சி காகிதத் தாயாரிப்பு” தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, பயன்படுத்திய காகிதத்தையே, மீண்டும் காகிதமாக மாற்றுவதுதான் இதன் சிறப்பு!  பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் மரம், கரும்புச்சக்கை, மூங்கில், வைக்கோல் ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டே காகிதம் தயாரிக்கப்படுகிறது. மரத்தை வெட்டி, அதை கூழாக்கி காகிதம் தயாரிக்கும் முறையே அதிகம் பின்பற்றப்படுகிறது. காகிதத் தயாரிப்புக்காக மரங்கள் வெட்டப்படுவதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கும் வகையில் காகிதம் தயாரிக்கும் ஆராய்ச்சிகள் உலக அளவில் நடந்தன. இதன் விளைவாக உருவான மறுசுழற்சி காகிதத் தயாரிப்பு தொழில்நுட்பம் பிரபலமானது.

japan apr 20

இந்நிலையில், இனி செய்திதாள்கள் மூலமாக செடி வளர்க்க வழி பிறந்து விட்டது. ஆம், ஜப்பான் நாட்டில் “தி மைனிச்சி ” (The mainichi )என்ற பிரபல நாளிதழ் ஒன்று இயங்கி வருகிறது. அதிகமாக விற்பனையாகும் இந்த நாளிதழுக்கான மூலப் பொருட்கள் மரத்தில் இருந்து கிடைக்கிறது. இதனால் பல்லாயிரக்கான மரங்கள் அழிக்கப்படுகிறது என்பதை உணர்ந்த இந்த செய்தி நிறுவனம் புதிய தொழில் நுட்பம் ஒன்றை கண்டுபிடித்து அதனை செயல்படுத்தி வருகிறது.

மைனிச்சி நிறுவனம் கடந்த ஆண்டு செய்தி தாள்களில் இருந்து செடிகள் வளரும் வகையிலான காதித்தை தயாரித்தது. இந்த செய்திதாள்களை படித்து விட்டு மண்ணில் போட்டு நீர் ஊற்றினால் சில தினங்களில் தானாக செடியாக அல்லது சிறிய தாவரமாக வளர்ந்து விடுமாம்.

பல செடிகளின் விதைகள் புதிய தொழில்நுட்பம் மூலம் கலந்த தயாரிக்கப்பட்ட காகிதங்களையே இந்த நாளிதழ் அச்சிக்கு பயன்படுத்துகிறது . மேலும் அச்சிடும் போது ரசாயன மைகளால் செடிகள் பாதிக்கபடுவதை தடுப்பதற்காக இயற்கை முறையில் தயாரிக்கபட்ட மைகளையே இந்த நிறுவனம் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் முதல் பசுமையான நவீன செய்திதாள் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த நாளிதழ் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் பிரதிகள் விற்பனையாவதுடன், 7 லட்சம் டாலர் வருமானத்தையும் ஈட்டுகிறதாக்கும்.

error: Content is protected !!