யோகா மாஸ்டர்களுக்கு கிராக்கி! – அசோசேம் சர்வே

யோகா மாஸ்டர்களுக்கு கிராக்கி! – அசோசேம் சர்வே

இன்னிய தேதியிலே சர்வதேச அளவில் கடைபிடிக்கும் யோகா தினம் காரணமா யோகா கற்றுக் கொள்வது பிரபலமடைஞ்சு வருது. உடல்நலத்தை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மக்கள் இதை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிச்சுருக்குது.. அதிலும் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருவதால் தற்போது இதை பயிற்றுவிப்பதற்கான பயிற்றுநர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி ஓர் ஆய்வை அசோசேம் வெளியிட்டுள்ளது. மேலும் பிரபலங்கள் யோகா கற்றுக் கொடுப்பது அதிகரித்து வருவதால் லாபகரமான தொழிலாகவும் மாறியுள்ளது. தற்போது யோகா கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் தங்களது அனுபவத்தை பொறுத்து பல்வேறு அளவில் கட்டணங்களை பெறுகின்றனர். அதிலும் நாடு முழுவதும் மக்கள் தங்களது வாழ்க்கை முறையில் ஒரு பகுதியாக யோகாவை பார்க்கத் தொடங்கியுள்ளதால், யோகா வகுப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கென தனியாக பயிற்சி மையங்கள் தொடங்குவதும் அதிகரித்துள்ளது. யோகா ஆசிரியர்களைப் பொறுத்து நீண்ட காலம், குறுகிய கால அளவில் வகுப்புகள் நடக்கின்றன. பெருவாரியான மக்கள் குறுகிய கால வகுப்புகளுக்குக் கட்டணமாக மாதத்துக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அளிப்பதற்கும் தயாராக உள்ளனர். இதை தங்களது உடல் நலனுக்கான முதலீடாகவே பார்க்கின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள், கார்பரேட் நிறுவனங்கள், மருத்துவ மனைகள் என பல இடங்களிலும் தற்போது யோகாவுக்கென தனி துறை உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் முன்னெப்போதும் இல் லாத வகையில் தெற்காசிய மற்றும் இந்தியாவில் யோகா பயிற்றுநர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகா பயிற்றுநர்கள் சென்றுள்ளனர் என்றும் 5 லட்சம் யோகா பயிற்று நர்கள் தேவையாக உள்ளனர் என்றும் அசோசேம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!