மொழிகளின் ஒலிகளை கேட்டு ரசிக்க உதவும் தளம்!

மொழிகளின் ஒலிகளை கேட்டு ரசிக்க உதவும் தளம்!

உயிருள்ள மொழிகளின் எண்ணிக்கை : 6912

இவற்றுள் இறக்கும் தறுவாயிலுள்ள மொழிகள் : 516

உலகில் அதிகூடிய மக்கள் பேசும் மொழி : மன்டாரின் சைனீஸ்

அதிக மொழிகள் பேசப்படும் நாடு : பப்புவா நியூ கினியா (820 வாழும் மொழிகள்)

அதிக சொற்களை கொண்ட மொழி : ஆங்கிலம் (250,000)

குறைந்த சொற்களை கொண்ட மொழி : ரகி ரகி (Taki Taki) (340 சொற்கள்)

இந்நிலையில் உலகில் பேசப்படும் ஒவ்வொரு மொழியின் ஒலிக்குறிப்பைக் கேட்டறிய விருப்பமா? எனில் ‘லோக்கலிங்குவல்இணையதளம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

lan feb 29

இந்தத் தளம் உலக வரைபடத்துடன் வரவேற்கிறது. வரைபடத்தில் உள்ள எந்த நாட்டின் மீது கிளிக் செய்தாலும், அந்த நாட்டில் பேசப்படும் மொழியின் ஒலிக்குறிப்பைக் கேட்கலாம். அந்த நாட்டுக்கான பொதுவான மொழியோடு, அங்குள்ள பல்வேறு பகுதிகளில் பேசப்படும் மற்ற மொழிகளுக்கான ஒலிக்குறிப்புகளையும் கேட்கலாம்.

இந்தியாவுக்கான பகுதியை கிளிக் செய்தால் இந்தியில் தொட‌ங்கி வரிசையாக தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் பட்டியலிடப்படுகின்றன‌. ஒவ்வொரு மொழியிலும் இடம்பெற்றுள்ள வார்த்தைகளின் உச்சரிப்புகளைக் கேட்கலாம். ஆண் மற்றும் பெண் குரல்களில் உச்சரிப்புகளைக் கேட்பதற்கான வசதியும் உள்ளது. மாநிலவாரியாகவும் கிளிக் செய்து கேட்க முடிகிறது.

பயணங்களில் ஆர்வம் கொண்ட டேவிட் என்பவ‌ர் இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளார். ஐரோப்பாவில் சுற்றிக்கொண்டிருந்தபோது உக்ரைன் நாட்டில் உள்ளு மொழியில் எளிய வார்த்தையைக்கூடத் தன்னால் சரியாக உச்சரிக்க முடியாமல் திண்டாடியபோது, உலக மொழிகளுக்கான இந்தத் தளத்தை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தளத்தில் ஒலிகளைக் கேட்டு ரசிப்பதோடு, விரும்பினால் உங்கள் மொழியில் புதிய வார்த்தைகளுக்கான ஒலிக்குறிப்புகளையும் இடம்பெறச் செய்யும் வசதி இருக்கிறது. அந்த வகையில் உலக மொழிகளின் ஒலிகளுக்கான விக்கிபீடியா போல இந்தத் தளம் விளங்குகிறது.

இணைய முகவரி: https://localingual.com

சைபர் சிம்மன்

error: Content is protected !!