மெரினா பீச்சில் இருந்து சிவாஜி சிலையை அகற்ற ஹைகோர்ட் அனுமதி!

மெரினா பீச்சில் இருந்து சிவாஜி சிலையை அகற்ற  ஹைகோர்ட் அனுமதி!

சென்னை மெரீனா பீச் மெயின் சாலையில் அமைந்துள்ள நடிகர் சிவாஜி சிலையை இடமாற்றம் செய்யலாம் என்று சென்னை ஹைகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.
jan 23 - sivaji statue
சென்னை மெரினா கடற்கரை முன்புள்ள காமராஜர் சாலை – டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில், நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் 12.7.2006 அன்று சிலை வைக்கப்பட்டது. இந்த சிலையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது என்றும் எனவே இதை அகற்றக் கோரி திருவல்லிக்கேணியை சேர்ந்த நாகராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்த போக்குவரத்து காவல்துறையினர், ‘சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாகதான் உள்ளது. இந்த சிலையினால் வாகன விபத்துக்குளும் ஏற்படுகிறது’ என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் இந்த சிலையை அகற்றக்கூடாது என்று நடிகர் சிவாஜி சமூகநல பேரவை, தமிழ் சங்க பலகை அமைப்பின் நிறுவனர் எம்.சி.தமிழ்பித்தன் உட்பட பலர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சத்தீஷ் குமார் அக்னிகோத்திரி, கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பு தேதியை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது.இந்நிலையில், வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை வேறு இடத்திற்கு மாற்றலாம் என்று தெரிவித்துள்ளனர்!

error: Content is protected !!