மூன்றாவது திருநங்கை நீதிபதியாக சுவாதி பிதான் ராய் அசாம் மாநிலத்தில் இன்று பதவியேற்றார்!

மூன்றாவது திருநங்கை நீதிபதியாக சுவாதி பிதான் ராய் அசாம் மாநிலத்தில் இன்று பதவியேற்றார்!

நம் நாட்டின் மூன்றாவது திருநங்கை நீதிபதியாக சுவாதி பிதான் ராய் அசாம் மாநிலத்தில் இன்று பதவியேற்றார்!

மூன்றாம் பாலினத்தவர்கள் பல சாதனைகளை சாதித்து வருகின்றனர். சமீபத்தில் அரசு துறைகளிலும் கால் பதித்து சிறந்து விளங்குகிறார்கள். மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து, தற்போது அசாம் மாநிலமும் திருநங்கை நீதிபதியை பெற்றிருக்கிறது.

அசாம் மாநிலத்தில் லோக் அதாலத் நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவராக சுவாதி பிதான் ராய் என்ற திருநங்கை ஒருவர் நீதிபதியாக இன்று பதவியேற்றார்.

இதுகுறித்து, சுவாதி கூறுகையில், ‘என்னை நீதிபதியாக நியமனம் செய்திருப்பது என்னுடைய சமுதாயத்திற்கு மிகவும் தேவை. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான பாகுபாடுகுறித்த விழிப்புணர்வை உருவாக்க இது உதவும் என கூறினார். மூன்றாம் பாலினத்தவர்களின் திறன் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அது அவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று உறுதி செய்ய போதுமான வாய்ப்பாக வழங்கப்பட வேண்டும். மூன்றாம் பாலினத்துக்கு எதிரான வழக்குகள் பல்வேறு நீதி மன்றங்களில் உள்ளன. அவைகள் விரைவில் தீர்க்கப் படும் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

error: Content is protected !!