முஸ்லிம் போராளிகள்-ராணுவம் இடையே மோதல்:பிலிப்பைன்ஸ் சோகம்!

முஸ்லிம் போராளிகள்-ராணுவம் இடையே மோதல்:பிலிப்பைன்ஸ் சோகம்!

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ், தீவுகள் நிறைந்த நாடாகும். இங்கு 1971-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மோரோ தேசிய விடுதலை முன்னணி என்ற முஸ்லிம் போராளிகள் அமைப்பு பிலிப்பைன்சை சுதந்திர இஸ்லாமிய நாடாக அறிவிக்கக் கோரி, அரசுக்கு எதிராக போராடி வருகிறது.இது தொடர்பாக அரசு மற்றும் போராளிகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், அரசு இதை மதித்து நடக்கவில்லை என்று கூறிய போராளிகள், பிலிப்பைன்சின் தென்பகுதியினை கடந்த மாதம் சுதந்திர முஸ்லிம் நாடாக அறிவித்தனர்.
sep 13 - philipines
இந் நிலையில் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஜாம்போங்கோ பகுதியின் சில கிராமங்களை நூற்றுக்கணக்கான மோரோ போராளிகள் அமைப்பினர் கடந்த திங்களன்று சுற்றிவளைத்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த ராணுவத்தினருடன் அவர்கள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். கிராம மக்களை கேடயமாக பயன்படுத்தி கடந்த 4 நாட்களாக அவர்கள் சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் பொதுமக்கள் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தாக்குதலுக்குப் பயந்த பொதுமக்கள் அங்குள்ள பள்ளிகள், சர்ச்சுகள், மைதானங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அருகில் உள்ள பசிலான் தீவு பகுதியிலும் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Muslim rebel clashes spread to second southern Philippine island
*********************************************************************************
Fighting between security forces and rogue Muslim rebels seeking to declare an independent state escalated in a southern Philippine city on Thursday and spread to a second island, officials said.

error: Content is protected !!