முத்து ராமலிங்கத்தின் ’சிநேகாவின் காதலர்கள்.’- மினி ஆல்பம்
தமிழன் திரைப்பட நிறுவனம் சார்பாக, தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் தனக்கே உரிய அளவான பொருட்செலவில் தயாரிக்க,நகைச்சுவை + நக்கலான எழுத்து நடையால் பிரபலமடைந்த பத்திரிகையாளரும், சில முன்னணி இயக்குனர்களின் பின்னணியில் இருந்து அவர்களது வெற்றிக்கு அரும்பாடுபட்டவருமான முத்துராமலிங்கன் எழுதி இயக்கும் படம் ‘சிநேகாவின் காதலர்கள்’. முற்றிலும் புதுமுகங்களுடன், இதுவரை தமிழ்சினிமா சொல்லத்தயங்கிய விஷயத்தை திரைக்கு கொண்டு வரும் படமாக, தயாராகி இருக்கிறது ‘சிநேகாவின் காதலர்கள்.’