முதல் அமைச்சரின் பொறுப்பு! – கொஞ்சம் அலசல்!

முதல் அமைச்சரின் பொறுப்பு! – கொஞ்சம் அலசல்!

“மாண்புமிகு தமிழக முதலமைச்சர் “

ஒரு மாநில முதல்வரின் constitutional responsibilities குறித்த நமது அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது

தமிழ்நாடு அரசாங்கத்தின் Business Rules ல் முதலமைச்சரின் பொறுப்புகள் எப்படி நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன

என்ற இரண்டு முக்கிய அம்சங்களை முன்னிறுத்திய பதிவு மட்டுமே.

cm oct 9 a

ஒரு மாநிலத்தில் முதலமைச்சர் இந்திய அரசமைப்புச் சட்டம் ஷரத்து 164(1) ன் கீழ் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். அதே ஷரத்தின்படி மாநில அமைச்சரவையின் எனைய அமைச்சர்கள் முதலமைச்சரின் பரித்துரையின் பெயரில் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றார்கள்

மாநில அமைச்சர்கள் நியமனம், அல்லது அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு, துறை ஒதுகீடுகளில் மாற்றம் இவை, முதலமைச்ச்சரின் பரிந்துரையின் பெயரால் ஆளுநர் செய்ய வேண்டும். முதலமைச்சரின் பரிந்துரை இல்லாமல் இவை செய்யப்ப்பட, எந்த ஒரு ஷரத்தின் கீழும் ஆளுநருக்கு அதிகாரம் explicit ஆக நமது Constitution of India ல் சொல்லப்படவில்லை.

ஷரத்து 163 (1) மற்றும் ஷரத்து 163(2) இரண்டிலும் நமது அரசமைப்புச் சட்டம், ஆளுநருக்கு வழங்கியிருக்கும் discretion மிகச் சிறப்பானது என சொல்லலாம்

அதிலும் 163(2) ல் மிகத் தெளிவாக the decision of the Governor in his discretion shall be final, and the validity of anything done by the Governor
shall not be called in question on the ground that he ought or ought not to have acted in his discretion

என அவரது discretion னின் விஸ்தீரணம் சொல்லப்பட்டிருக்கிறது

ஷரத்து 167 ல் முதலமைச்சரின் பொறுப்புகள் எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன

அமைச்சரவையின் முடிவுகள், தீர்மானங்கள் , சட்டமியற்றபடவிருக்கும் subject ன் proposal களை ஆளுநருக்கு முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும்

நமது அரசமைப்புச் சட்டத்தின் நுணுக்கமான அம்சங்களை, வியந்து FaceBook ல் பல முறை எழுதியிருக்கின்றேன்

நாடாளுமன்றம் ( Parliament of India ) என்பது மக்களவை அதாவது Lok Sabha + மாநிலங்கள் அவை அதாவது Rajaya Sabha + குடியரசு தலைவர் என்பதே எனும் தெளிவுமிக்க ஷரத்து 79 போலவே

மாநிலங்களின் சட்டமன்றங்கள் குறித்த ஷரத்து 168 மிகத் தெளிவாக மாநில Legislature என்பது ஆளுநர் + சட்ட மன்ற பேரவை + சட்ட மேலவை ( சட்ட மேலவை இயங்கும் மாநிலங்களுக்கு) என்று சொல்கிறது

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், மாநில நிர்வாகத்தில் சில துறைகளின் அமைச்சராகவும் செயல்படுவது வாடிக்கை.. அதாவது சில துறைகள் அவர் அந்த துறையின் அமைச்சராக இயங்குவார்

அப்படியாக தற்போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொறுப்பில் இருக்கும் துறைகள் Public Department, Home Department எனும் மிக முக்கியமான துறைகள்

இந்த துறைகளின் செயல்பாடுகள் என்ன என்பதை அறிமுக அளவில் தெரிந்து கொள்வது அவசியம்

Public Department எனும் பொதுத் துறை : பொது நிர்வாகம், அமைச்சர்களின் அலுவலகப் பணியாளர்கள் நியமனம், ஆளுநரின் அலுவலகப் பணியாளர்கள் நியமனம், இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் நியமனம், இந்திய காவல் பணி அலுவர்கள் நியமனம், இந்திய வன பணி அலுவலர்கள் நியமனம் , மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணி நியமனம், அமைச்சரவைக் கூட்டம் தொடர்பான அலுவல்கள், மாநில மனித உரிமை ஆணையம் என்பவை இந்த துறையின் மிக முக்கிய அலுவல்கள், இந்த துறை தலைமைச் செயலாளரால் நிர்வகிக்கப்படுகிறது

Home Department எனும் உள்துறை : இந்த துறை தற்போது Home, Prohibition and Excise Department எனும் கலவை..

Home எனும் உள்துறைக்கு அமைச்சர் ஜெயலலிதா Prohibition and  Excise Department எனும் மதுவிலக்கு , ஆயத் தீர்வைத் துறைக்கு அமைச்சர் தங்கமணி

உள்துறையின் முக்கிய பொறுப்புகள் : காவல் துறை நிர்வாகம், தீயணைப்புத் துறை நிர்வாகம், சிறைத் துறை நிர்வாகம், தடய அறிவியல் துறை நிர்வாகம், குடியுரிமை

Home, Prohibition and Excise Department எனும் கலவை !!! தனி தனி அமைச்சர்கள் !!

ஆனால் துறைக்கான செயலர் ஒருவரே : தற்போது அபூர்வ வர்மா இந்த துறையின் செயலர்

முதலமைச்சரின் நேரடிப் பொறுப்பில் இருக்கும் துறைகள் தவிர ஏனைய அமைச்சர்களின் பொறுப்பில் இயங்கும் துறைகளின் மீது முதலமைச்சரின் பொறுப்புகள் எவை, என்ன வகையான நிர்வாக செயல்பாடுகள், அதிகார வரம்புகள், flow of authority / responsibility என்பதை சுருக்கமாகவும் எளிமையாகவும் பார்க்கலாம்

தமிழ்நாட்டின் மாநில நிர்வாகம் மூன்று அடுக்குகளில் நிகழ்கிறது

முதல் அடுக்கு நிர்வாகம் : மாநில அரசின் தலைமைச் செயலக அளவில் முதலமைச்சர் , துறை அமைச்சர், துறையின் அரசு செயலர், தலமைச் செயலகத்தில் அந்த துறையின் ஏனைய அலுவலர்கள் + ஊழியர்கள்

இந்த level ல், கொள்கை முடிவுகள், கொள்கைக் குறிப்புகள், நிதி ஒதுக்கீடு, நிதி ஆதாரம், சட்டமியற்றுதல், சட்ட மாற்றங்கள், அரசு ஆணைகள், அரசு வழி காட்டுதல் , துறை சார்ந்த பணிகள் மேற்பார்வை

இரண்டாம் அடுக்கு நிர்வாகம் : துறைத் தலைவர்கள் ( Head of the Departments ) அதாவது Directors , Directorates, எனும் முதன்மை அலுவலர்கள் , தலைமைப் பொறியாளர்கள், இவர்களின் கீழ் இயங்கும் ஏனைய அலுவலர்கள், பணியாளர்கள்

மூன்றாம் அடுக்கு நிர்வாகம் : மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள், துறைகளில் Joint Directors , Deputy Directors , Assistant Directors , பொறியியல் பணிகளில் Superintending Engineers , Executive Engineers , other Engineers ஏனைய அலுவலர்கள் பணியாளர்கள்

நம் மாநில நிர்வாகம் நிதி அளவில் எவ்வளவு பெரியதும் முக்கியமானதும் என்பதை வாசிக்கின்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

தமிழக அரசின் நிதி வருவாய் 2015-2016 நிதி நிலை அறிக்கையிலிருந்து refer செய்யப்படுகிறது.

கொஞ்சம் விபரமாகப் பிரித்துப் பார்க்கலாம்

தமிழ்நாடு அரசின் வரிகள் மூலம் ரூபாய் 960831422000
தமிழ்நாடு அரசின் வரி இல்லா இன வருவாய் ரூபாய் 90714991000
மத்திய அரசு வரிகளில் மாநில் பங்கு ரூபாய் 21498900000
மத்திய அரசின் உதவி / மான்யம் ரூபாய் : 163767986000

இந்த வருவாய் மொத்தம் ஒரு நிதி ஆண்டுக்கு ரூபாய் 1426813299000

இந்த நிதி ஆதாரத்தினை வைத்துக் கொண்டு மாநில நிர்வாகம், தினசரி நடவடிக்கைகள், வளர்சிப் பணிகள் நிகழ்த்தும் பெரும் பொறுப்பு கொண்டவர் முதலமைச்சர் !!

தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனவர்களின் பெரும்பான்மையானவர்களின் தேர்வு முதலமைச்சர், அவரின் விருப்பத் தேர்வில் அமைச்சர்கள் நியமனம் அமைச்சரவை அமைப்பு எனும் தொடக்க நிலை அமைப்புகளைத் தொடர்ந்து,

இந்த அமைச்சரவையின் விவாதங்கள் / வழி காட்டுதலில் ஒவ்வொரு துறைக்குமான கொள்கைக் குறிப்புகள் (Policy Notes ) வடிவமைக்கப்படுகின்றன

இப்படியான கொள்கைக் குறிப்புகள் செய்யப்பட வேண்டிய பணிகள், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் இவற்றிற்கான Basic Frame Work.

இந்த கொள்கைக் குறிப்புகளின் வழியே தான், அரசு இயங்குகிறது, அரசின் செலவீனங்கள் இந்த கொள்கைக் குறிப்புகள் வழியே தான் செய்யப்படுகின்றன

முன்னரே குறிப்பிட்ட மூன்றடுக்கு நிர்வாக அமைப்பில் முதல் அடுக்கு நிர்வாகம் தமிழ் நாட்டின் தலைமைச் செயலகத்தில் நிகழ்கிறது.

இந்த நிர்வாக அடுக்கில் அரசு நடவடிக்கைகளின் விபரங்களை சுருக்கமாகவும், எளிமையாகவும் கவனிக்கலாம்

இந்த விபரங்களை Proposals for Legislation ( சட்ட முன் மொழிவு தொடர்பான) , Papers laid on the Table of the House(சட்ட மன்ற அங்கீகாரம் வேண்டி வைக்கப்படும் பொருண்மை) Resolutions (சட்ட மன்ற தீர்மானம்) எனும் அளவிலும்

துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு எனும் Inter-Departmental References எனும் அளவிலும் பார்க்கலாம்

சந்திர மவுலீஸ்ரன்

error: Content is protected !!