மதுரையில் கேப்டன் பதிவியேற்பு விழா ! – மிஸஸ் விஜயகாந்த் நம்பிக்கை

மதுரையில் கேப்டன் பதிவியேற்பு விழா ! – மிஸஸ் விஜயகாந்த் நம்பிக்கை

மதுரை ஓபுளாபடித்துறையில் நடைபெற்ற தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் மிஸஸ். விஜயகாந்த் பேசும்போது, “வீரம் விளைந்த மதுரையில் தான் தேமுதிக 2005-இல் தொடங்கப்பட்டது. முதல் தேர்தலிலேயே 8.33 சதவீதம் வாக்குகள் பெற்று சாதனை படைத்தது. திருமங்கலம் இடைத்தேர்தலில் கூட 13 ஆயிரம் வாக்குகள் பெற்றது தேமுதிக.அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணி முடிவாகாத நிலையில், இருகட்சிகளுக்கும் மாற்றாக தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி உருவாகியுள்ளது. இன்று எல்லோரும் அ.தி.மு.க., தி.மு.க., தவிர்த்து தே.மு.தி.க., ம.ந.கூ.,யை பற்றி பேசுகின்றனர். அந்தளவுக்கு அ.தி.மு.க., தி.மு.க.,விற்கு சிம்ம சொப்பனமான இக்கூட்டணி உருவாகியுள்ளது. இக்கூட்டணி வெற்றியைதடுக்கும் சக்தி யாருக்கும் இல்லை.நான்கு மாதங்களாக தி.மு.க., அல்லது பா.ஜ., கூட்டணிக்கு தே.மு.தி.க., போகுமா என பேச்சு நிலவியது. விஜயகாந்த் கூட்டணிக்காக யாரையும் தேடி போகவில்லை.
12512397_969164959832630_8209657938506465410_n
”பழம் கனிந்து பாலில் விழும்,” என, கருணாநிதி கூறினார். ”நஞ்சு பாலில் பழம் விழக்கூடாது,” என, வைகோ கூறினார். கூட்டணி சேராததால், ”பழம் பாழாகி விட்டது,” என்றார், பொன்.ராதாகிருஷ்ணன். ஆனால் இந்த பழம் ஞானப்பழம். மக்கள் ஆதரவை பெற்ற பழம். பழம் தேனில் விழுந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் அமரப் போகும் பழம்.முதல்வராகும் தகுதி விஜயகாந்த்திற்கு இல்லை என்றால், தமிழகத்தில் யாருக்குமே அந்த தகுதி இல்லை. தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் யாரிடமாவது பணவசூலில் ஈடுபட்டார்கள் என கூற முடியுமா.மக்களுடன் மக்களாக வாழ்பவர்கள் நாங்கள். முதல்வர் ஜெ., போல ஹெலிகாப்டரில் பறப்பவர்கள் அல்ல.

மழை வெள்ளம் பாதிப்பின் போது முதல்வர் ஜெ., போய் பார்த்தாரா? ஆனால் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருபது நாட்கள் விஜயகாந்த் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மழை வெள்ள பாதிப்பிற்கு மத்திய அரசு ரூ.2000 கோடி நிவாரணம் வழங்கியது. துாத்துக்குடியில் நிவாரணம் கிடைக்கவில்லை என அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். அப்படியானால் அந்த பணம் எங்கு போனது. வழக்கை சந்திக்க தயார்: வாக்காளர்கள் பணம் வாங்கும்படி நான் கூறியதாக என்மீது வழக்கு போட்டுள்ளனர். இதற்கு பயப்பட மாட்டேன். எந்த வழக்கையும் சந்திக்க தயார். தே.மு.தி.க., ம.ந.கூ., யாராலும் பிரிக்க முடியாது. எங்கள் கூட்டணி பெயரில் எந்த பிரச்னையும் இல்லை. கேப்டன் விஜயகாந்த் அணி என கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் பெருந்தன்மையுடன் கூறியுள்ளனர்.

எங்கள் கூட்டணி தலைவர்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. எதிர்கட்சிகள் மற்றும் பத்திரிகைகள் தான் பிரச் னையை எழுப்புகின்றன. விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என அறிவித்திருக்கிறோம். அ.தி.மு.க.,வில் யார் முதல்வர் என அறிவிப்பார்களா? ஐந்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் வெறுப்பின் உச்சத்தில் உள்ள னர். சொத்து குவிப்பு வழக்கு என்ற கத்தி ஜெயலலிதா தலைக்கு மீது தொங்குகிறது. தி.மு.க.,வில் முதல்வர் கருணாநிதியா, ஸ்டாலினா என்ற பிரச்னையுள்ளது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தி.மு.க., அ.தி.மு.க., தயாரா?
vija mar 28
தமிழகத்தின் முதல்வர் பதவிக்கு வர விஜயகாந்த்துக்கு அனைத்துத் தகுதிகளும் உண்டு. இரு கட்சிகளின் ஆட்சி யிலும் லஞ்சம், ஊழல் பெருகியுள்ளது. தேமுதிக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் லஞ்ச ஊழலை ஒழிக்க, ரமணா திரைப்படப் பாணியில் ஆக்ஷன் கரப்ஷன் போர்ஸ் என்ற அமைப்பை உருவாக்குவோம். கல்வி, மருத்துவம் இலவச மாக வழங்கப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளும் 24 மணி நேர மருத்துவமனைகளாக மாற்றப் படும். அரசுப் பள்ளிகள் காலையில் பள்ளிகளாகவும், மாலையில் அரசு மகளிர் கல்லூரிகளாகவும் செயல்படும். 25 ஆயிரம் ஏழைப்பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். 750 சதுர அடியில் அனைவருக்கும் இலவச வீடுகள் கட்டித் தரப்படும்.திருமணத்துக்கு பெண்களுக்கு ரூ.1 லட்சம் அரசு சார்பிலும், ரூ.2 லட்சம் குறைந்த வட்டியில் கடனாகவும் வழங்கப்படும். மதுரையில் அதிமுக அரசு அறிவித்த திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்படும்.மறுபடியும் சொல்கிறேன், கூட்டணித் தலைவர்களுக்குள் பிரச்னையை உருவாக்க நினைப்பவர்களின் கனவு பலிக்காது. நால்வர் அணியாக இருந்தது தற்போது ஐவராக இணைந்து பாண்டவர் அணியாக உள்ளது. பாண்டவர்கள் தோற்றதாக வரலாறு இல்லை. எனவே எங்கள் வெற்றி பெற்றவுடன் மதுரையில் கேப்டன் பதிவியேற்பு விழா நடைப் பெறும்”..என்றார்.

error: Content is protected !!