பெண்ணுக்கு 15:ஆணுக்கு 05 பவுன் நகைகளை எடுத்துச் செல்ல இலங்கை கெடுபிடி!

பெண்ணுக்கு 15:ஆணுக்கு 05 பவுன் நகைகளை எடுத்துச் செல்ல இலங்கை கெடுபிடி!

தமிழகம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர் தங்க நகைகள் எடுத்துச் செல்வதில் கட்டுப் பாட்டை விதிக்க இலங்கை சுங்க திணைக்களம் முடிவு செய்துள்ளது.திருமண வைபவங்கள் என பலர் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பாகங்களுக்கு செல்லும் போது சுங்க திணைக்களம் வழங்கும் சலுகையை பயன்படுத்தி தங்க கடத்தல்களில் ஈடுபடுவதால் இந்தியா மற்றும் குறிப்பாக தமிழகம் செல்பவர்களுக்கு அவர் பெண்ணாக இருப்பின் 15 சவரண் (பவுண்) நகையும், ஆண்களுக்கு 5 சவரணம் (பவுண்) நகைகளும் கொண்டு செல்ல அனுமதியளிப்பது என அங்குள்ள சுங்க துறை முடிவு செய்துள்ளது.
nov 28 - vanikam srilanka
திருமண விழாக்கள் என்று பலர் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பாகங்களுக்கு செல்லும் போது சுங்க அமலாக்க துறை வழங்கும் சலுகையை பயன்படுத்தி தங்க கடத்தல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் இந்தியா செல்பவர்களுக்கு அவர் பெண்ணாக இருப்பின் 15 பவுன் நகையும், ஆண்கள் 5 பவுன் நகையும் கொண்டு செல்லவே அனுமதிப்பது என அங்குள்ள சுங்க திணைக்களம் முடிவு செய்துள்ளது. மேலும் எடுத்துச் செல்லும் நகைகளை மீண்டும் எடுத்து வருவதை உறுதிசெய்தால் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி அளிப்பது என்றும் சுங்க திணைக்களம் தீர்மானித்துள்ளதாம்.

இது தொடர்பாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடை முறைகள் தொடர்பாக தங்க அமலாக்க துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். அண்மையில் கொச்சின் விமான நிலையத்தில் 11 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அமலாக்க துறையின் நெகிழ்வுத் தன்மையை சாதகமாக்கி மோசடிகளில் ஈடுபடுவது தெளிவாகியுள்ளது. எனவே சுங்க கடத்தல் விடயத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க சுங்க திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கே. அசோக்குமார்

Related Posts

error: Content is protected !!