பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் ‘கவுண்ட்டவுண்’ இன்னிக்கு ஸ்டார்ட் !

பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் ‘கவுண்ட்டவுண்’ இன்னிக்கு ஸ்டார்ட் !

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1949-ல் புதிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின் இந்தியா முழுவதும் கடல்சார் பல்கலை உருவாக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 2008 நவம்பர் 14-ல் சென்னையில் கடல்சார் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது பெரும்பாலும் கடல் வாணிபத்தை பொறுத்து உள்ளது. அந்த வகையில் கப்பல் துறைக்கு திறமையான, திறன்மிக்கவர்களை உருவாக்குவது கடல்சார் பல்கலையின் மிக முக்கியமான கடமையாக உள்ளது. இதனிடையே இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 4 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டு விட்டன. இப்போது 5-வது செயற்கைகோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-இ யை பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுமையத்தில் இருந்து 20-ந் தேதி காலை 9-31 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இதற்காக எரிபொருள்கள் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. தற்போது இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் ராக்கெட்டை ஏவுவதற்கான ‘கவுண்ட்டவுண்’ இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
isro jan 18
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள், “பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் 2-வது ஏவுதளத்தில் இருந்து வரும் 20-ந் தேதி (புதன்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது. 320 டன் எடையும், 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 இ செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோமீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலைநிறுத்தப்படுகிறது. இதனுடைய ஆயுள்காலம் 12 ஆண்டுகளாகும்.இதன் மூலம் இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். ராக்கெட்டை ஏவுவதற்கான ‘கவுண்ட்டவுண்’ இன்று பகல் தொடங்கப்பட உள்ளது”இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.

error: Content is protected !!