பான் கார்டு நம்பரை வைத்து ரயில் டிக்கெட் புக் பண்ணாதீங்க!

பான் கார்டு நம்பரை வைத்து ரயில் டிக்கெட் புக் பண்ணாதீங்க!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த கவுகாத்தி எக்ஸ்பிரசில், கடந்த 1ம் தேதி காலை இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திராவை சேர்ந்த இளம் பெண் ஸ்வாதி பரிதாபமாக பலியானதையடுத்து ரயில் பயணத்தின் போது, அனைத்து வகுப்பு பயணிகளும் டிக்கெட்டுடன் ஒரிஜினல் அடையாள அட்டைகள் கொண்டு வரவேண்டும். முன்பதிவு செய்யும்போது, ரயில்வே துறையால் அங்கீகாரம் செய்யப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை (ஒரிஜினல்) கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு போன்றவற்றிற்கு ‘பான்’ எண்களை தெரிவிக்காமல் பிற அடையாள அட்டை எண்களை தெரிவிப்பது நல்லது’ என வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
PAN Card Sample
வருமான வரி செலுத்துபவர்களும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் பண வரவு – செலவு வைத்துக் கொள்பவர்களும் ‘பர்மனன்ட் அக்கவுன்ட் நம்பர்’ எனப்படும் ‘பான்’ எண்ணை தெரிவிப்பது கட்டாயம்.இந்த எண்ணை தெரிந்து கொள்ளும் பிறர் அவற்றை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அடையாள அட்டை ஆதாரமாக பான் எண்ணை குறிப்பிடுகின்றனர். அத்துடன் அவர், பெயர், முகவரி, மொபைல் எண், வயது, பாலினம் போன்ற விவரங்களையும் டிக்கெட் முன்பதிவு விவரமாக தெரிவிக்கின்றனர். இந்த விவரங்கள் மோசடி பேர்வழிகள் கையில் கிடைத்தால் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே பான் எண்ணுக்குப் பதிலாக பிற அடையாள அட்டைகளான ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை பயன்படுத்தலாம் என வருமான வரித்துறையினர்ெதரிவிக்கின்றனர்.

error: Content is protected !!