பழம & பழச்சாறு விற்பனையில் இறங்கும மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

பழம & பழச்சாறு விற்பனையில் இறங்கும மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

தற்போது வாகன உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் முதல் முறையாக பழம மற்றும் பழச்சாறு விற்பனையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பழ வகைகளை விற்பனை செய்ய முடிவு செய்யும் பொருட்டு இதன் முதலாவது விற்பனையகம் ஹைதராபாதில் தொடங்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது..
nov 22 vaninikam Saboro_
மஹிந்திரா நிறுவனம் ஏற்கெனவே பழங்கள் ஏற்றுமதியில் ஈடுபட்டு வந்தது. பல்வேறு நாடுகளுக்கு திராட்சை ஏற்றுமதி நடைபெற்றுவருகிறது. ஏற்றுமதிக்கென்று பிரத்யேகமாக திராட்சைப் பயிர் விளைவிக்க, மகாராஷ்டிரத்தில் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் நெருங்கிசெயல்படுகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் புதிய உற்பத்தி முறைகளால் விளைச்சல் 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

வேளாண் பொருள் ஏற்றுமதி வணிகத்தின் அடுத்த கட்டமாக, பிராண்டட் பழச்சாறு விற்பனை தொடங்கப்பட்டிருக்கிறது. ஹைதராபாதில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. “ஸபரோ’ என்ற பெயரில் இவை விற்பனைக்கு வந்துள்ளன. ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம், இவற்றுடன் சில வெளிநாட்டு பழ வகைகளின் சாறு விற்பனை செய்யப்படும்.

ஸபரோ பழச்சாறு திட்டத்தில் இதுவரை ரூ. 20 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 200 சிறப்பு ஸபரோ விற்பனையகங்களைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறோம் என்று நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் மற்றும் பார்ம் எக்விப்மண்ட் பிரிவுத் தலைவர் பவன் கோயங்கா வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Mahindra & Mahindra diversifies into branded fresh fruit business with Saboro

error: Content is protected !!