பத்திரிகையாளர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த விருந்தில் செல்பி சர்க்கஸ்!

பத்திரிகையாளர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த  விருந்தில் செல்பி சர்க்கஸ்!

சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதில் உள்ள முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி பேசுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு 7 மணிக்கு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்துக்கு முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும் பிரதமர் அழைப்பை ஏற்று, சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்கு பிரதமர் மோடியின் இல்லத்துக்கு வந்தனர்.பிரதமர் மோடி அவர்களை வரவேற்றார். அதைத் தொடர்ந்து தேநீர் விருந்து நடைபெற்றது.
modi selfi nov 29
இந்நிலையில் ஓராண்டு இடைவெளிக்குப் பிரகு பத்திரிகையாளர்களுக்கும் மதிய விருந்து அளித்துள்ளார். பத்திரிகை யாளர்களுடனான சந்திப்பை பிரத்யேக எப்போதும் தவிர்த்து விடுவார் கடந்த தீபாவளி அன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார் .அதனை தொடர்ந்து நேற்றுதான் மீண்டும் பத்ரிக்கையாளர்களை சந்தித்து மதிய விருந்து அளித்தார்.மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த மந்திரிகள் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், ராஜீவ் பிரதாப் ரூடி, ஸ்மிருதி இரானி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த பிரம்மாண்ட விழாவில் 500-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களும் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரதமர் மோடி, தீபாவளி விருந்து வழங்கினார்.

அவ்விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், “எப்போதுமே பண்டிகைகள் அனைவருடனும் நேசப் பிணைப்பை ஏற்படுத்துபவை. அதனால் நமது சமூகத்தில் பண்டிகைகள் சிறப்பான இடத்தை பெற்றிருக்கின்றன. தீபாவளி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளின் சமூக பொருளாதார அம்சத்தை ஆராய்ந்தால், அவற்றில் சுவாரஸ்யமான பார்வைகள் இருக்கும். தீபாவளி பண்டிகையை பொறுத்தமட்டில் இது சமத்துவம் மற்றும் பாரபட்சமற்ற உணர்வினை பலப்படுத்தும்” என குறிப்பிட்டார்.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் முடிந்து பிரதமர் மோடி புறப்படுகிறபோது, பத்திரிகையாளர்களுடன் தனிப்பட்ட முறையில் சில வார்த்தைகள் பேச விரும்பி நின்றார். உடனே பத்திரிகையாளர்கள் அனைவரும் அவரை சூழ்ந்தனர். பிரதமருடன் அவர்கள் கை குலுக்கியதையும் பேசியதையும் கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாவலர்கள் திணறினர்.இது போதாதென்று ஒவ்வொருவரும் அவருடன் ‘செல்பி’ படம் எடுத்துக்கொள்ள வேறு ஆர்வம் காட்டினர். பிரதமர் மோடியும் அவர்களுக்கு தடை போடவில்லை. ‘செல்பி’ படம் எடுத்துக் கொள்ள முடியாமல் யாரும் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என கருதிய பிரதமர் மோடி, அனைவரும் ‘செல்பி’ படம் எடுத்துக்கொள்ள உற்சாகத்துடன் ஒத்துழைப்பளித்தார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது ட்விட்டரில், “ அரசுக்கு எதிராக கடுமையான கேள்வியை கேட்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கும் ஊடகத்தின் நிலைமை இதுதான்.கண்ணியமில்லாத செல்பி சர்க்கஸின் அற்புதமான காட்சிகள் இவை. “ என்று பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!