பணவீக்க விகிதத்தில் உலகின் முதலிடம் பிடித்த இநதியா!

பணவீக்க விகிதத்தில் உலகின் முதலிடம் பிடித்த இநதியா!

ஆசியாவிலேயே 3வது பெரிய பொருளாதார நாடாக கருதப்படுவது, இந்தியா. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ச்சி குறைவாக இருப்பதுடன், விலைவாசி பலமடங்கு அதிகரித்துள்ளது.இதையடுத்து ஆசிய நாடுகளில் இந்தியாவில் தான் பணவீக்கம் அதிகம் என மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி ஆசியாவில் மட்டுமின்றி உலகிலேயே அதிக பணவீக்க விகிதத்தை கொண்ட நாடும் இந்தியா தான் என்று அறிவித்துள்ளது.
edit Indian_rupee.owl 14
இந்தியாவில் பல்வேறு துறைகளில் கடந்த ஆண்டு நிகழ்ந்த செயல் பாடுகள் அதையொட்டி நாட்டின் வளர்ச்சி எந்த அளவிற்கு உள்ளது என்ற விவரத்தை மத்திய புள்ளியியல் துறை விரிவாக வெளியிட்டுள்ளது.அதில் ஆசிய நாடுகளில் பெரிய பொருளாதார நாடு என்ற வரிசையில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் வளர்ச்சி குறைந்தும், விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது. குறைவான வளர்ச்சி அதிக அளவில் பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாக மத்திய வங்கிகளின் கொள்கைகளில் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

மேலும், கடந்த ஆண்டில் தொழில்துறையின் வளர்ச்சி 8.4 சதவீதம் இருந்தது. நடப்பு ஆண்டில் அக்டோபர் மாதத்தில் இந்த வளர்ச்சி 1.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது. குறைந்த வருமானம் காரணமாக கிராம பகுதிகளில் பணவீக்கம் 11.7 சதவீதமாக இருக்கிறது. நகரங்களில் இது 10.5 சதவீதமாக உள்ளது.

இந்த பணவீக்க உயர்வு குடும்பதாரர்களின் பட்ஜெட்டை கடுமையாக பாதித்து வருகிறது. ஆனால்,பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் மத்திய அரசு, சந்தை சட்டங்களையும் சீரமைக்க மாநில அரசுகள் தவறியதே பணவீக்க உயர்விற்கு காரணம் என மாநில அரசுகளை குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தனது புதிய பணக் கொள்கையை அடுத்த வாரம் வெளியிட உள்ளது. இதனால் நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கி வட்டிவிகிதத்தை அதிகரிக்க உள்ளதாக தெரிகிறது.

.

error: Content is protected !!