நேரு Vs படேல் அத்வானியின் அடுத்த ஆதார தகவல்!

நேரு Vs படேல் அத்வானியின் அடுத்த ஆதார தகவல்!

நம் நாட்டின் முதல் பிரதமரான நேருவுக்கும் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேலுக்கும் இடையே மோதல் இருந்தது என்பதை இப்போது மற்றொரு புத்தகத்தை சுட்டிக் காட்டி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மீண்டும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளார்.
nov 12 - advani.
நாடு சுதந்திரம் அடைந்திருந்த காலகட்டத்தில் பல மாகாணங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சர்தார் படேல் மும்முரமாக இறங்கியிருந்தார். அப்போது ஐதராபாத் நிஜாம் தன் கட்டுப்பாட்டில் உள்ள ஐதராபாத்தை பாகிஸ்தானுடன் இணைக்க முற்பட்டார். இதை அறிந்த மத்திய அரசு அமைச்சரவை கூட்டத்தை கூட்டி விவாதித்த போது ஐதராபாத்திற்கு ராணுவத்தை அனுப்பி நிஜாமை வழிக்கு கொண்டு வர வேண்டும் என, படேல் வலியுறுத்தியுள்ளார்.அதை ஏற்க பிரதமர் நேரு தயாராக இருக்கவில்லை. இதனால் படேல் கோபம் கொண்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார் என சில நாட்களுக்கு முன் பா.ஜ. தலைவர் அத்வானி தன் இணையதள பக்கத்தில் எழுதியிருந்தார்.அதற்காக அவர் எம்.கே.கே.நாயர் என்ற நேருவின் உதவியாளராக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி எழுதிய புத்தகத்தை குறிப்பிட்டிருந்தார். அடுத்த சில நாட்களில் அத்வானியின் கருத்துக்கு நாயர் மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் ஐதராபாத்திற்கு ராணுவத்தை அனுப்பும் விவகாரத்தில் நேருவுக்கும், படேலுக்கும் இடையே மோதல் இருந்தது என்பதை திரும்பவும் வலியுறுத்தும் வகையில் பல்ராஜ் கிருஷ்ணா என்ற பத்திரிகையாளர் எழுதிய புத்தகத்திலிருந்து சில வரிகளை அத்வானி நேற்று தன் இணைய தளபக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.அதில் ‘ஐதராபாத்திற்கு ராணுவத்தை அனுப்ப மறுத்த நேருவை எதிர்த்து அமைச்சரவை கூட்டத்திலிருந்து படேல் வெளி நடப்பு செய்தார். அவரைப் பார்த்து அப்போதைய உள்துறை செயலர் வி.பி.மேனனும், கூட்டத்திலிருந்து வெளியேறினார்’ என அத்வானி குறிப்பிட்டுள்ளது அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

More Patel vs Nehru on Advani’s blog
****************************************************
enior Bharatiya Janata Party (BJP) leader LK Advani today referred to another book to support his claim that there were differences between Jawaharlal Nehru and Sardar Patel over sending the Indian army to Hyderabad when the Nizam was trying to join Pakistan at the time of partition.

Related Posts

error: Content is protected !!