நிதி & நீதித்துறைகளில் பெண்கள், நலிந்த பிரிவினருக்கு குறைவான பிரதிநிதித்துவம்: ஜனாதிபதி கவலை!

நிதி & நீதித்துறைகளில் பெண்கள், நலிந்த பிரிவினருக்கு குறைவான பிரதிநிதித்துவம்: ஜனாதிபதி கவலை!

நம் நாட்டின் நீதி மற்றும் நிதித்துறையின் உயர் நிலைப்பதவிகளில் பெண்கள், ஓபிசி வகுப்பினர், எஸ்.சி, எஸ்.டி, வகுப்பினருக்கு மிகக் குறைந்த அளவிலான இடங்களே கிடைத்துள்ளன. இதனை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. இந்த அவல நிலையை சீர் செய்ய உடனடியாக நடவடிக்கை தேவை என்று இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டார். இந்தியச் சட்டக் கமிஷனும் நிதி ஆயோக்கும் இணைந்து நடத்திய தேசிய சட்டநாள் விழாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் துவக்கிவைத்துப் பேசினார்.தனது உரையில் இக்கருத்துகளை குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

நமது சமூகத்தில் பாரம்பரியமான நலிந்த பிரிவினராக பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினர் இதர பிற்பட்ட வகுப்பினர் உள்ளனர். நான்கு நீதிபதிகளில் ஒரே ஒருவர்தான் பெண்ணாக இருக்கிறார். பரந்து, விரிந்த இந்திய சமூகத்தின் உண்மையான பிரதிநிதித்துவத்தை எதிரொலிப்பதாக நமது பொது நிறுவனங்களும் நிதிதுறையும் அமைய வேண்டும்.

நம்முடைய சபார்டினேட் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை மொத்தம் 17,000 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் 4,700 பேர்தான் பெண்கள். கிட்டத்தட்ட 4இல் 1 பகுதி இடங்கள்தான் பெண்களுக்கு கிடைத்துள்ளது.இந்த பிரதிநிதித்துவம் ஏற்கமுடியாத அளவுக்கு மிகவும் குறைவானதாக உள்ளது.

உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருப்பவர்கள் மவட்ட நீதிமன்றங்களிலும், செஷன்ஸ் நீதிமன்றங்களிலும் உள்ள நீதிபதிகளை உயர்நீதிமன்றங்களுக்கு உயர்த்துவதற்கான தகுதியை பெருமளவுக்கு உயர்த்த வேண்டும்.இது அவர்களின் புனிதக் கடமையாகும். இந்தச் சூழ்நிலையை மாற்ற நீண்டகாலத் தீர்வுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. இத்தகைய நடவடிக்கை காரணமாக நமது சபார்டினேட் நீதிமன்றங்கள்மீதும் மக்கள் வைத்துள்ள மதிப்பை உயர்த்தும் நிலை உருவாகும். அதே சமயம் நீதிபதிகளின் தகுதி, திறன், பண்புகள் ஆகியவற்றில் எந்தச் சமரசத்துக்கும் இடம்கொடுக்கக்கூடாது.
இவ்வாறு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.

error: Content is protected !!