நட்சத்திரக் கிரிக்கெட்! – கோர்ட் ஆர்டர் _ ஸ்பான்ஸர்ஸ் + டீம் + பிராக்டிஸ் ஆல்பம்

நட்சத்திரக் கிரிக்கெட்! – கோர்ட் ஆர்டர் _ ஸ்பான்ஸர்ஸ் +  டீம் + பிராக்டிஸ் ஆல்பம்

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எஸ்.தமிழ்வேந்தன் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் , “திரைப்பட நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வருகிற 17-ந் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த விளையாட்டு போட்டியை காண சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின் றன. இந்த விளையாட்டு போட்டியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்கின்றனர். இதனால், இந்த போட்டிக்கு சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தற்போது தேர்தல் நேரம் என்பதால், 5 ஆயிரம் போலீசாரை இதுபோன்ற நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் பாதிப்பு வரும்.


மேலும், போட்டி நடக்கும் விளையாட்டு மைதானத்தில் 3 கட்டிடங்களை இடிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட் டுள்ளது. இந்த சூழ்நிலையில், அங்கு போட்டிகள் நடத்தப்பட்டால், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல, இந்த போட்டி நடைபெறும்போது ஓட்டுக்கு பணம் பட்டுவாடாவும் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, இந்த நட்சத்திர கிரிக் கெட் போட்டிக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று தலைமை செயலர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு புகார் செய்தும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. அதனால், என்னுடைய மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.செந்தில்குமார் ஆஜராகி வாதிட்டார்.இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த வழக்கு விளம்பரத்துக்காக தாக்கல் செய்ய ப்பட்டுள்ளது என்று கருதுகிறோம். எனவே வழக்கின் தகுதியின் அடிப்படையில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கப்போகிறோம்’ என்று கருத்து தெரிவித்தனர். உடனே இந்த வழக்கை திரும்பப்பெறுவதாக மனுதாரர் வக்கீல் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்பப்பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் சூர்யா தலைமையிலான ‘சென்னை சிங்கம்ஸ்’ அணியில் நடிகர்கள் அர்ஜுன், அருண் விஜய், நந்தா,விக்ராந்த், மிர்ச்சி சிவா,உதய்,ஹரீஷ் கல்யாண் மற்றும் க்ரிஷ் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். ‘ராம்ராஜ் கார்டன் ‘ நிறுவனத்தினர் இந்த அணியினை ஸ்பான்சர் செய்கிறார்கள்.


விஷால் தலைமையிலான ‘மதுரை காளைஸ்’ அணியில் நடிகர்கள் ரமணா, சூரி,மன்சூர்அலிகான், தி,R.K.சுரேஷ்,அருண்பாலாஜி,ரிஷி
ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ‘எஸ்தெல்’நிறுவனத்தினர் இந்த அணியினை ஸ்பான்சர் செய்கிறார்கள்.

நடிகர் ‘ஜெயம்’ரவி கேப்டனாக இருக்கும் இருக்கும் ‘நெல்லை டிராகன்ஸ்’, அணியில் நடிகர்கள் சிபிராஜ், விஜய் வசந்த்,நட்டி என்கிற நட்ராஜ்,ப்ரித்வி,அஸ்வின் சேகர்,வைபவ்,முரளிராம் மற்றும் செளந்தரராஜா ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த அணியினை ‘வசந்த் &கோ’ நிறுவனத்தினர் ஸ்பான்சர் செய்கிறார்கள்.

நடிகர் ஆர்யாவின் தலைமையை ஏற்றிருக்கும் ‘சேலம் சீட்டாஸ்’அணியில் நடிகர்கள் கார்த்திக் முத்துராமன், உதயா, ‘ஜித்தன்’ரமேஷ், சாந்தனு,ஆதவ், பவன்,அபினய் மற்றும் செந்தில் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

நடிகர் கார்த்தி தலைமையிலான ‘கோவை கிங்ஸ்’அணியில் நடிகர்கள் பிரசாந்த்,ஜே.கே.ரித்திஷ்,பரத்,விஷ்ணு,சஞ்சய் பாரதி, ராமகிருஷ்ணன்,ஹரிஷ் மற்றும் ஜெரால்டு ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். ‘சக்திமசாலா’ நிறுவனத்தினர் இந்த அணியினை ஸ்பான்சர் செய்கிறார்கள்.

நடிகர் ஜீவா கேப்டனாக இருக்கும் ‘தஞ்சை வாரியர்ஸ்’அணியில் நடிகர்கள் பசுபதி,பிரசன்னா,ஆரி,லக்‌ஷ்மண்,ஷரன்,’ப்ளாக்’பாண்டி மற்றும் விக்னேஷ் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.ACS மருத்துவக்கல்லூரி இந்த அணியினை ஸ்பான்சர் செய்கிறார்கள்.

நடிகர் விஜய்சேதுபதி கேப்டன் பொறுப்பேறிருக்கும் ‘ராம்நாடு ரைனோஸ்’ அணியில் நடிகர்கள் கலை,ஸ்ரீகாந்த் போஸ்’வெங்கட்,பிரேம், வருண்ஐசரி,மகேந்திரன்,சிரிஷ்,ஹரிஷ் ஓரி மற்றும் அஃப்சல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் கேப்டனாக இருக்கும் ‘திருச்சி டைகர்ஸ்’ அணியில் நடிகர்கள் விக்ரம்பிரபு,ஷாம்,அசோக்செல்வன்,சதிஷ், ஹேமச்சந்திரன்,அசோக்,நிதின்சத்யா மற்றும் சீமோன் ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்த அணியை ‘கல்யாண் ஜுவல்லர்ஸ்’ நிறுவனத்தினர் ஸ்பான்சர் செய்கிறார்கள்.

நடிகர் விக்ரம் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

error: Content is protected !!