நகை, வைரம் மீதான வரியை வாபஸ் வாங்க முடியாதுங்கறேன்! – செண்ட்ரல் மினிஸ்டர் கறார்

நகை, வைரம் மீதான வரியை வாபஸ் வாங்க முடியாதுங்கறேன்! – செண்ட்ரல் மினிஸ்டர் கறார்

”தங்க, வைர நகைகள் மீது ஒரு சதவீத உற்பத்தி வரி விதிக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் தங்க நகைகளை கொண்டு வரும் நோக்கத்தில்தான் அந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டது.காங்கிரஸ் கட்சி ஆதரிக் கும்போது, சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வரும். அப்போது, தங்கம் உள்பட எல்லா பொருட்களும் சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் வந்து விடும். ஆகவே, நகை மீதான உற்பத்தி வரியை வாபஸ் பெற முடியாது “ என்று பாராளுமன்றத்தில் அருண் ஜெட்லி திட்டவ்வட்டமாகத் தெரிவித்தார்.
jeweel
மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த 2016-2017-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில், வெள்ளி நீங்கலாக தங்கநகை உள்பட பிறவகை ஆபரணங்களுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது.கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்க நகை நிறுவனங்கள், வியாபாரிகள், தங்க நகை தொழில் சார்ந்த தொழிற்கூடங்கள் கடந்த 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நாடு முழுவதும் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகை வியாபாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் குழுவினர் உறுதி அளித்தனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வராததால், கடந்த 8-ந் தேதியில் இருந்து காலவரையற்ற கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உஸ்மான் சாலை உள்பட ஒரு சில இடங்களில் மட்டும் நேற்று நகைக்கடைகள் திறந்திருந்தன. திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு ‘ஆர்டர்’ கொடுத்த நகைகளை உரிய நேரத்திற்கு ஒப்படைப்பதற்காக திறந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் பெரியமேடு, வேப்பேரி உள்பட பெரும்பாலான இடங்களில் நகைக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி, “கலால் வரி விதிப்புக்கு எதிராக 13-வது நாளாக நாங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தில் கடையடைப்பு போராட்டம் காரணமாக ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.இதில் அரசுக்கும் வருவாய் இழப்பு உண்டு. திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு ‘ஆர்டர்’ கொடுத்த நகைகளை உரிய நேரத்தில் ஒப்படைக்க தியாகராயநகர் பகுதியில் 12 கடைகள் மட்டும் திறந்திருக்கின்றன.

மற்ற இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வருகிற 17-ந் தேதி டெல்லியில் அகில இந்திய தங்க நகை வணிகர்கள் பங்கேற்கும் மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளோம்.மத்திய அரசு அதிகாரிகளிடம் நகை வியாபாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் வரையிலும் தமிழகம் முழுவதும் நகைக்கடைகள் அடைப்பு போராட்டம் தொடரும்”என்று அவர் கூறினார்.

error: Content is protected !!