தி.மு.க. Vs அ.தி.மு.க Vs ? + = அனல் வீசத் தொடங்கும் தமிழகத் தொகுதிகள்!

தி.மு.க. Vs  அ.தி.மு.க Vs ? + = அனல் வீசத் தொடங்கும் தமிழகத் தொகுதிகள்!

வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக-அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் 169 தொகுதிகளில் நேருக்கு நேராய் களம் காண்கின்றன. அதிமுக, திமுக வேட்பாளர்கள் வெளியாரிவிட்ட நிலையில், மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் முழுமையான பட்டியலை வெளியிடும்போது முக்கியமான தொகுதிகளில் பலமுனைப் போட்டி நிலவ வாய்ப்புள்ளது.
tn elecdtion apr 14
அதிமுகவைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இது போன்ற நேரடிப் போட்டி கடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே வலுவான போட்டி உருவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்த வ்ரை..:

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் பா.வளர்மதியை எதிர்த்து, திமுக பிரபலமான கு.க.செல்வம் போட்டியிடவுள்ளார்.

விருகம்பாக்கத்தில் விருகை வி.என்.ரவி (அதிமுக), க.தனசேகரன் (திமுக), பார்த்தசாரதி (தேமுதிக), தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) என நான்கு முக்கியப் பிரமுகர்கள் போட்டியிடுவதால் அந்தத் தொகுதியும் பிரதான தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

ஆலந்தூர், சைதாப்பேட்டையைப் பொருத்தவரை திமுக-அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே மக்களுக்கு நன்கு அறிமுகமான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

அதிமுகவில் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், பொன்னையனும், திமுகவில் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசனும் போட்டியிட உள்ளனர்.

வட மாவட்டங்களில்..:வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக வேட்பாளராக துரைமுருகன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.கே.அப்பு, இந்தத் தேர்தலிலும் எதிர்க்கிறார். பெண்ணாகரத்தில் பி.என்.பி. இன்பசேகரனும் (திமுக), கே.பி.முனுசாமியும் (அதிமுக) வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொகுதியில் பாமக செல்வாக்கு பெற்றது என்பதால், அங்கு அந்தக் கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்க வாய்ப்புள்ளது.

இதேபோன்று, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் சொரத்தூர் இரா.ராஜேந்திரன் (அதிமுக), எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (திமுக) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தென்-மத்திய மாவட்டங்கள்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதனுக்கும் (அதிமுக), முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஐ.பெரியசாமிக்கும் இடையேயும், அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சரும், கரூர் எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி (அதிமுக), எம்எல்ஏ கே.சி.பழனிசாமி (திமுக) இடையேயும் கடும் போட்டி நிலவும்.

திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவை எதிர்த்து, அரசு கொறடாவான ஆர்.மனோகரன் (அதிமுக) களம் இறங்குகிறார். மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை (அதிமுக) எதிர்த்து திமுக வேட்பாளர் கோ.தளபதி போட்டியிடுகிறார். கம்பம் தொகுதியில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையனும் (அதிமுக), செல்வாக்கு பெற்றவரான ஆர்.ராமகிருஷ்ணனும் (திமுக) நேரடியாக களம் காணுகின்றனர்.

அருப்புக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் வைகைச் செல்வனை எதிர்த்து, திமுக வேட்பாளராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இருவரும் முன்னாள் அமைச்சர்கள்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் தமிழ்நாடு வீட்டு வாரியத் தலைவர் முருகையாபாண்டியனும் (அதிமுக), ஆர்.ஆவுடையப்பனும் நேரடியாக மோதுகின்றனர்.

பாளையங்கோட்டையில் தமிழ்மகன் உசேனும் (அதிமுக), டி.பி.எம்.மைதீன்கானும் (திமுக) போட்டியிட உள்ளனர்.

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சரான சி.த.செல்லபாண்டியனும், திமுக முன்னாள் அமைச்சரான பெ.கீதாஜீவனும் நேருக்கு நேராக களம் காண உள்ளனர்.

திருச்செந்தூரில் அதிமுக ஆதரவில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரான ஆர்.சரத்குமாரும், திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணனும் களம் இறங்குவதால் அந்தத் தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.

இதனிடையே அமைச்சர்களை எதிர்க்கும் காங்கிரஸ்: தென் மாவட்டங்களில் சில தொகுதிகளில் அதிமுக அமைச்சர்களை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிட உள்ளது. திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரையும், சிவகாசியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியையும், குளச்சலில் முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சமாலையும் எதிர்க்கவுள்ளது.

error: Content is protected !!