“தற்கொலையை போக்க புரொடீசியர்கள் சார்பில் டிவி சேனல்!”- கேயார் தகவல்

“தற்கொலையை போக்க புரொடீசியர்கள் சார்பில் டிவி சேனல்!”- கேயார் தகவல்

”சினிமாவை பொறுத்தவரை தற்போதைய வருமானத்தில் 80 சதவீத வருமானம் எலக்ட்ரானிக் மீடியாவில் இருந்துதான் வருகி றது. மீதமுள்ள 20 சதவீதம்தான் திரையரங்குகள் மூலம் வருகிறது. ஆனால் நாம் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 99 ஆண்டுகளுக்கு எழுதிக் கொடுத்துவிடுகிறோம். இது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. தயவு செய்து தயாரிப்பாளர்கள் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கேபிள் டி.வி மூலமாகவும் படங்களுக்கு பல கோடிகள் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கம் அதனையும் பரிசீலனை செய்து வருகிறது.டி.வி.சேனல் ஒன்றை தயாரிப்பாளர் சங்கமே நடத்தும் யோசனையும் இருக்கிறது.” என்று தமிழ் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் அறிவித்துள்ளார்.
appochi kiramam
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் அசிஸ்டெண்டாக இருந்த வி.ஐ.ஆனந்த் என்பவரின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘அப்புச்சி கிராமம்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேயார் பேசும்போது,” சினிமாவில் ஒருவர் வளர்ச்சியடைந்த நிலையில் மற்றவர்களுக்கு பண உதவி செய்வதைக்காட்டிலும் டெக்னீஷியன்கள், நடிகர்கள் பலரை அறிமுகப்படுத்துவதுதான் பாரதிராஜா இத்துறைக்கு செய்யும் சிறந்த தொண்டாகும். இதுபோன்ற படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் அதிக காட்சிகளை ஒளிபரப்ப முன் வர வேண்டும். இந்த ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரையில் 74 நேரடிப் படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் நல்ல கருத்தோடு எல்லா வகை யிலும் நிறைவை தந்த படங்கள் கோலிசோடா, தெகிடி, குக்கூ ஆகிய 3 படங்கள் மட்டுமே.

பாரதிராஜாவை ‘16 வயதினிலே’ படத்தில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவை சமீபத்தில் சந்தித்தேன். தற்போது இங்கே தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். இந்தநிலை தொடர்ந்தால் பல தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படும் என்பதை வருத்தத்தோடு கூறினார். தயாரிப்பாளர் இனம் இன்றைக்கு அழிந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு இந்த துறை காரணம் அல்ல. நம்மிடையே விழிப்புணர்வு இல்லை.

சினிமாவை பொறுத்தவரை தற்போதைய வருமானத்தில் 80 சதவீத வருமானம் எலக்ட்ரானிக் மீடியாவில் இருந்துதான் வருகி றது. மீதமுள்ள 20 சதவீதம்தான் திரையரங்குகள் மூலம் வருகிறது. ஆனால் நாம் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 99 ஆண்டுகளுக்கு எழுதிக் கொடுத்துவிடுகிறோம். இது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. தயவு செய்து தயாரிப்பாளர்கள் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கேபிள் டி.வி மூலமாகவும் படங்களுக்கு பல கோடிகள் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கம் அதனையும் பரிசீலனை செய்து வருகிறது.

டி.வி. சேனல் ஒன்றை தயாரிப்பாளர் சங்கமே அறிமுகப்படுத்தும் யோசனையும் இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் சிறிய தயாரிப்பாளர்களுக்கு இதுபோன்ற செயல்முறைகள் நம்பிக்கை கொடுப்பதாக அமையும். அதற்கு உங்கள் எல்லோருடைய ஒத்துழைப்பும் நிச்சயம்தேவை என்றார்.

error: Content is protected !!