தமிழ்நாடு இறகுப் பந்து சங்கத்தின் தலைவர் பதவியைக் கைப்பற்றினார் அன்புமணி !

தமிழ்நாடு இறகுப் பந்து சங்கத்தின் தலைவர் பதவியைக் கைப்பற்றினார் அன்புமணி !

தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று (12.11.2017 ) நடைபெற்றது. இதில் நடந்த தமிழ்நாடு இறகுப் பந்து சங்கத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில், தலைவராக பாமக இளைஞரணித் தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய இறகுபந்து சங்கத்தின் செயலாளர் புனியா சௌத்ரி, கர்நாடக இறகுப்பந்து சங்கத்தலைவர் சுதிர் உள்ளிட்டோர் தேர்தல் கண்கானிப்பாளர்களாக இருந்து நடத்திய இந்த தேர்தலில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்புமணி.

பொதுக்குழுவில் பேசிய கர்நாடக மாநில இறகுபந்தாட்ட சங்கத்தின் தலைவர் சுதிர், ’’இந்தியாவிலயே எந்த மாநிலத்திலும் பயிற்சியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில் அதிகளவில் நிதியினை ஒதுக்கி வீரர்கள், பயிற்சியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்’’ என்று மருத்துவர் அன்புமணியைப் பாராட்டினார்.

பின்னர் பேசிய அன்புமணி, தன்னை மீண்டும் தமிழ்நாடு இறகுபந்து சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு அனைத்து மாநில, மாவட்ட சங்கபொருப்பாளர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார். மேலும் தமிழக இறகுபந்தாட்ட வீரர்களை இந்திய அளவில் மட்டுமல்லாமல் ஆசிய போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் முதல் ஒலிம்பிக் போட்டி வரை பங்குபெற செய்து வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைப்பேன் என்று உறுதியளித்தார் அன்புமணி.

error: Content is protected !!