தமிழகத்தில் 70.90 %, இடைத் தேர்தலில் 71.62 % வாக்குகள் பதிவு! – வீடியோ!!

தமிழகத்தில் 70.90 %, இடைத் தேர்தலில் 71.62 % வாக்குகள் பதிவு! – வீடியோ!!

நம் நாட்டின் பார்லிமெண்ட் இரண்டாம் கட்டதேர்தல் நடைபெறும் 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஏப்ரல் 18ம் தேதி வியாழக்கிழமை தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதே சமயம் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் அங்கு மட்டும் இரவு 8 மணி வரை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

தேசம்  முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடை பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதலில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு 91 தொகுதிகளில்  கடந்த ஏப்ரல் 11 ம் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து தமிழ் நாட்டில் உள்ள  39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு  நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் இந்த தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடந்தது.

இந்நிலையில் மார்ச் 29 மற்றும் 30ம் தேதிகளில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், பள்ளிகள், தொழில்துறைகள் என பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து, வேலூரில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 16ல் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டது.

இதையடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் இன்று ஏப்ரல் 18ல்  தமிழகம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி உட்பட12 மாநிலங்களில் மொத்தம் 95 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.  அதை போல் தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதை போல் ஓடிசாவில் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலும். இன்று நடைபெற்றது,. தனால் தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

மக்களவை தேர்தல் தொகுதிகள்

அசாம்- 5, பீகார் -5, சத்தீஸ்கர் -3, ஜம்மு காஷ்மீர்- 2, கர்நாடகம்-14, மகாராஷ்டிரம் -10, மணிப்பூர்-1 ஓடிசா-5, புதுச்சேரி-1, தமிழ்நாடு- 38, உத்தரப்பிரதேசம்- 8, மேற்கு வங்கம்- 3 ஆகிய  மொத்தம் 95 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் வாக்காளர்கள் அனைவரும் காலை முதலே தங்கள் வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்தனர். தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வாக்குப்பதிவு 

9மணி வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது:-

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 70.90 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

12 மாநில வாக்குப்  பதிவு விவரம்

2-ம் கட்ட மக்களவைத் தேர்தலில்  தேசிய அளவில் சராசரியாக 66 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநில வாரியாக வாக்குப் பதிவு சதவீத விவரம் வருமாறு:

1 .அசாம்        — 75.61 %

2. பீகார்         —  59.73 %

3. சத்தீஸ்கர்     —  68.70 %

4. ஜம்மு –காஷ்மீர் -– 43.37 %

5. கர்நாடகா      —  65 %

6. மகாராஷ்டிரா   — 57.22 %

7. மணிப்பூர்       — 74.69 %

8. ஒடிசா          — 58 %

8. புதுச்சேரி       — 78 %

10. தமிழ்நாடு       — 72 %

11. உத்தரப் பிரதேசம் – 62 %

12. மேற்கு வங்காளம் – 78 %

தமிழக  மக்களவைத் தொகுதி                தமிழகத்தில் இடைத்தேர்தல்

                            வாக்குப்பதிவு

           வரிசை எண் தொகுதி        வாக்குப் பதிவு

  •     ஆம்பூர்                                     76.35
  •     ஆண்டிப்பட்டி                         75.19
  •     குடியாத்தம்                            81.79
  •     ஹரூர்                                      86.96
  •     ஹோசூர்                                 71.29
  •     மானாமதுரை                        71.22
  •     நிலக்கோட்டை                     85.50
  •    பாப்பிரெட்டிபட்டி                   83.31
  •     பரமக்குடி                                71.69
  •     பெரம்பூர்                                  61.06
  •     பெரிய குளம்                          64.89
  •     பூந்தமல்லி                             79.14
  •     சாத்தூர்                                    60.87
  •     சோளிங்கர்                              79.63
  •     தஞ்சாவூர்                                66.10
  •     திருப்போரூர்                          81.05
  •     திருவாரூர்                              77.38
  •     விளாத்திகுளம்                       78.06
  • https://www.youtube.com/watch?v=v-juJroLsyo

error: Content is protected !!