டெல்லி மாணவி பாலியல் வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள்: தண்டனை நாளை அறிவிப்பு:

டெல்லி மாணவி பாலியல் வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள்: தண்டனை நாளை அறிவிப்பு:

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள் என்று கூறியுள்ள டெல்லி விரைவு நீதிமன்றம், தண்டனை தீர்ப்பு நாளை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.அதே சமயம் இன்று குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மாணவியின் தாய், தந்தையர் கூறியுள்ளனர்.

இது குறித்து இருவரும் நிருபர்களிடம் பேசுகையில்,” கடந்த வாரம் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது எங்களுக்கு கவலை அளித்தது. சட்டத்தின் மீது உள்ள நம்பிக்கை எங்களுக்கு போனது. இருப்பினும் இன்றைய தீர்ப்பில் கடும் தண்டனை இருக்கும். குற்றவாளிகளை தூக்கு தண்டனை வழங்கினால் தான் நாங்கள் திருப்தி அடைவோம், இதற்கென பிரார்த்திக்கிறோம்” என்றனர்.
sep 10 -Delhi-Gang-Rape
தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் ஒரு கும்பலால் 23 வயது மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த மாணவியுடன் சென்ற அவரது நண்பரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியது.இதில், படுகாயங்களுடன் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அந்த மாணவி, தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. போலீசார் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில் அக்கும்பலை சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அந்த 6 பேரில், ஒருவன் 18 வயதுக்கு குறைவானவன் என்பதால், சிறார் நீதிமன்றத்தில் அவன் மீது தனியாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவனுக்கு, அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 5 குற்றவாளிகளில் ராம்சிங் என்பவன், கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். இதனால் அவன் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும், வினய்சர்மா, அக்சய் தாக்கூர், பவான் குப்தா மற்றும் முகேஷ் ஆகிய 4 குற்றவாளிகள் மீதான வழக்கு விசாரணை டெல்லி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 117 நாட்கள் நடைபெற்ற அந்த வழக்கு விசாரணை கடந்த 3 ஆம் தேதி முடிவடைந்தது.இந்நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள் என்று டெல்லி விரைவு நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கன்னா அறிவித்துள்ளார். நாளை தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார.

இந்த வழக்கு நடந்து முடிய 9 மாதங்கள் ஆகியுள்ளன. விரைவு கோர்ட்டில் 7 மாதம் தொடர்ந்து நடந்த வழக்கில் இது வரை 130 வாய்தாக்கள் தள்ளி போடப்பட்டுள்ளன. கடத்தி கற்பழித்தல், கொலை, கொடூர ஆயுதங்கள் மூலம் தாக்குதல், சாட்சியங்களை மறைத்தல், கிரிமினல் சதி தீட்டுதல், உள்ளிட்ட இந்திய தண்டனை சட்டம் 364 ( கடத்தி கற்பழித்தல்), 302 ( கொலை ) , 307 ( கொலை முயற்சி) , 376 (2) ( கூட்டாக கற்பழித்தல் ) , 365, 394, 395, 397, 120 உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

Delhi gangrape: All four convicted for rape and murder of the braveheart


***********************************************************************************
A fast-track court in Delhi has convicted four men – Vinay Sharma, Akshay Thakur, Pawan Gupta and Mukesh Singh – for the December 16, 2012 brutal gangrape and murder of a 23-year-old paramedical student in a private bus in the national capital. The arguments on the sentencing of the four convicts will take place on Wednesday. The court has held the four men guilty of 13 offences including gangrape, unnatural offence, murder, dacoity, conspiracy, kidnapping and destruction of evidence. The court has convicted the four by relying on the victim’s dying declaration and forensic evidence.

Related Posts

error: Content is protected !!