டெல்லியில் நீடிக்கும் குழப்பம்! மறு தேர்தல் வருமா??

டெல்லியில் நீடிக்கும் குழப்பம்! மறு தேர்தல் வருமா??

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு தினங்கள் ஆகியும், தொங்கு சட்டப்பேரவைக்குத் தீர்வு ஏற்படவில்லை. ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை பலம் இல்லாத காரணத்தால், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளுமே ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவதில்லை என்று அறிவித்துள்ளன. மேலும், மறு தேர்தலை எதிர்கொள்ளும் மனநிலையில் இரு கட்சிகளுமே இருப்பதால், தில்லியில் வாக்காளர்களுக்கு மீண்டும் தங்களது வாக்குரிமையை காட்ட வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
delhi State-Assembly-Election-Results- 11
கடந்த டிசம்பர் 4-ல் நடைபெற்ற டெல்லி தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இதில், முதலிடம் பெற்ற பாரதிய ஜனதா கூட்டணி 32, புதிய கட்சியான ஆம் ஆத்மி 28, கடந்த மூன்று முறையாக ஆட்சி செய்த காங்கிரஸ் 8, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சுயேச்சைக்கு தலா ஒரு இடம் என வெற்றி பெற்றுள்ளன.

மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையில் ஆட்சி அமைக்கத் தேவையான 36 இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், பாஜக ஆட்சி் அமைக்க உரிமை கோரவில்லை.

ஆம் ஆத்மி கட்சியும் எதிர்க்கட்சி வரிசையில் அமரவே முடிவெடுத்துள்ளது. மீண்டும் தேர்தல் வந்தால் அதைச் சந்திக்கவும் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறது.இதனிடையே, ஓர் இடத்தில் வெற்றி பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரான கே.சி.தியாகி, எவ்வித நிபந்தனையும் இன்றி ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராவிட்டால், டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு அரசுக்கு பரிந்துரை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதற்காக அளிக்கப்படும் ஆறு மாதகால அவகாசத்தில் கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படவும் வாய்ப்புண்டு என்று டெல்லி வட்டாரம் தெரிவிக்கிறது..

Related Posts

error: Content is protected !!