டெல்லியில் அரசியல் பிரமுகர்களை கடத்த திட்டம் ;பயங்கரவாதிகள் ஊடுருவல்!

டெல்லியில் அரசியல் பிரமுகர்களை கடத்த திட்டம் ;பயங்கரவாதிகள் ஊடுருவல்!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், முக்கிய வேட்பாளர்கள் சிலரை கடத்தி சென்று அரசை மிரட்ட வாய்ப்புள்ளது என்றும். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதி யாசின் பட்கலை விடுதலை செய்ய கூறி, பயங்கரவாதிகள் கோரிக்கை வைப்பார்கள் என்றும் இந்த சம்பவத்தில் இந்தியன் முஜாகிதீன் மற்றும் சிமி இயக்கத்தினர் இந்த செயலில் ஈடுபடக்கூடும் எனவும் மத்திய உளவு துறையினர் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் அனுப்பியுள்ளனர்.
Delhi_Indiagate
கடந்த 2008ம் ஆண்டு டில்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்ப்பில் தொடர்ப்புடைய முக்கிய குற்றவாளி என சந்தேகத்தின் பேரில் யாசின் பட்கல் மற்றும அவரது கூட்டாளி அசதுல்லா அக்தர் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யபப்ட்டனர்.இந்நிலையில் அவர்களை விடுவிக்க கோரி தில்லியில் தேர்தல் சமயத்தில் அச்ம்பாவிதங்களை ஏற்படுத்தவும், முக்கிய அரசியல் தலைவர்களை கடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து டில்லியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து உளவுத்துறை அனுப்பியுள்ள ரிப்போர்ட்டில்,”ஒரு பயங்கரவாத சம்பவத்தில் கைது செய்யப்பட்டு மகாஹாஷ்டிரா சிறையில் இருக்கும் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் யாசின் பட்கல் மற்றும அவரது கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி டில்லியில் அரசியல் தலைவர்களை கடத்த அந்த அமைப்பினர் திட்டமிட்டுள்ளளனர். மேலும், இந்திய முஜாகிதீன் மற்றும் சிமி அமைப்புக்கள் இணைந்து, மக்களவை தேர்தலில் போது தில்லியின் முக்கிய இடங்களை தாக்க முடிவு செய்துள்ளதாக”கூறி உள்ளது.

Related Posts

error: Content is protected !!