டி.என்.ஏ. மாயாஜாலங்களைக காட்டும் ‘உயிர் மொழி’

டி.என்.ஏ. மாயாஜாலங்களைக காட்டும் ‘உயிர் மொழி’

ஹார்மோன் மூவி மேக்கர்ஸ் வழங்க மானவ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் உயிர்மொழி. இதில் புதுமுகங்கள் ராஜீவ், சசி, சர்தாஜ் ஆகியோர் நாயகர்களாகவும், கீர்த்தி நாயகியாகவும் அறிமுகமாகின்றனர். பாபி ஆண்டனி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி ராஜா இயக்குகிறார். இவர் விளம்பர படங்கள் எடுத்தவர். படம் பற்றி அவரிடம் கேட்ட போது,”. ஐந்து இளைஞர்கள் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். ஐவரும் வெவ்வேறு ரகம். இவர்களின் தனித்தனியான காதலில் அவள் யாரை விரும்புகிறாள் என்பது கதை.ஐந்து பேரின் பாத்திரங்களும் டி.என்.ஏ. மூலக்கூறு அடைப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது. மனிதனின் மரபு பண்புகளை உள்ளடக்கியதே டி.என்.ஏ. ஆல்பா, பீட்டர், காமா, டெல்டா ஓமேகா என ஐந்து வகை டி.என்.ஏ.க்கள் உள்ளன. டி.என்.ஏ. மூலக்கூறுகளின் மாயாஜாலங்கள் சுவாரஸ்மாக படமாக்கப்பட்டு உள்ளது. காதல், பாசம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, அதிர்ச்சி அனைத்தும் இருக்கும்.” என்கிறார்.

error: Content is protected !!