டிஜிட்டல் இந்தியா – தொழில் நுட்ப ரீதியான அலசல்!

டிஜிட்டல் இந்தியா – தொழில் நுட்ப ரீதியான அலசல்!

டிஜிட்டல் இந்தியாவுக்கு 4.5 லட்சம் கோடி ரூபாய் (!) முதலீடாம். 18 லட்சம் வேலை வாய்ப்பாம் !2013இல் பிராட்பேண்ட் இணைப்பு விஷயத்தில், 189 நாடுகளில் 125ஆவது இடத்திலிருந்த இந்தியா 2014ஆம் ஆண்டில் 131ஆம் இடத்துக்கு இறங்கி விட்டது. இன்டர்நெட் வசதி இருக்கிற குடும்பங்கள் என்கிற விஷயத்தில் 2013இல் 75ஆவது இடத்தில் இருந்தது 2014இல் 80ஆம் இடத்துக்கு இறங்கி விட்டது. ஒரே ஒரு ஆறுதல், இணையத்தைப் பயன் படுத்தும் தனிநபர்கள் விஷயத்தில் 142ஆவது இடத்திலிருந்து 136ஆவது இடத்துக்கு ஏறியிருப்பது.
edit sep 29
2.5 லட்சம் கிராமங்களை இணையத்தில் இணைப்பதாக அரசு சொல்கிறது. இப்போதைய நிலை யில் இந்தியாவில் பிராட்பேண்ட் இணைப்பு உள்ள வீடுகள் 1.5 கோடிதான் – அதாவது, மக்கள் தொகையில் 5 சதவிகிதத்துக்கும் குறைவு. 5 லட்சம் கிராமங்களுக்கு இணைய இணைப்பு தரப் போவதாக மைக்ரோசாப்ட் சத்ய நாதெல்லா கூறியிருக்கிறாராம். அப்படியானால், மேக் இன் இந்தியா அம்போதானா? கிராமங்களுக்கு இணைப்புக் கொடுத்தாலும் மின்சாரம் வேண்டுமே…

கடந்த ஆறு மாதங்களில் செல்போனில் இன்டர்நெட் பயனர்கள் எண்ணிக்கை 5.2 கோடி சேர்ந்து இப்போது அது 35 கோடி ஆகியிருக்கிறது. அந்த 35 கோடியிலும் 21.3 கோடி பேர்தான் செல் போனில் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.காரணம், ஸ்மார்ட்ஃபோன்கள் அதிகரிப்பு தான். ஆனாலும், கடந்த ஆண்டின் கடைசி ஆறு மாதங்களில் ஸ்மார்ட்போன் விற்பனை இது வரை இல்லாத அளவுக்கு இறங்கி விட்டது. செல்போன்களின் விலைவீழ்ச்சியால் இந்த ஆண்டு ஓர ளவுக்கு முன்னேற்றம் இருக்கலாம். ஆனால் விலைவாசி கடும் உயர்வு காரணமாக அந்த முன் னேற்றம் பாதிக்கப்படவும் கூடும்.அரசு உருவாக்குகிற ஆப்கள். எத்தனை பேர் இதையெல் லாம் பயன்படுத்தப் போகிறார்கள்?

பெரும்பாலான இணைய மற்றும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இணையத்தை முறையாகப் பயன்படுத்தவே தெரியாது, (டிஜிட்டல் இந்தியா என்று புரொபைல் படம் மாற்றியவர்களில் 99 சதவிகிதம் பேருக்கு இது என்னவென்றே தெரியாது. மார்க் மாற்றினார் என்றால், அவருக்கு இதில் பெருத்த லாபம் கிடைக்கப்போகிறது. அத னால்தான் ஆறுமாதப் பழைய திட்டத்துக்கு மோடியைப் பயன்படுத்தி தன் நிறு வனத்துக்கும் இன்டர்நெட் டாட் ஆர்க் திட்டத்துக்கும் விளம்பரம் தேடிக் கொள்ள நினைத்தார்.)

மோடி அரசு என்பதாலேயே ஒரு திட்டத்தைக் குறைகூறக்கூடாது. ஆனால் பல கேள்விகள் இருக்கின்றன. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கி னார்கள் என்று இதுவரை எந்த விவரங்களும் காணோம். டிஜிட்டல் இண்டியாவுக்கு அடிப்படை இணைய வேகம். செல்போன் இன்டர்நெட் இணைப்புகளின் வேகம் பெரும் தலைவலியாக இருக்கிறது. எந்த இணைப்பும் திருப்திகரமாக இல்லை. இதை மேம்படுத்த என்ன செய்யப் போகிறார்கள்?
கால் டிராப் விஷயத்திலேயே இன்னும் ஏதும் செய்ய இயலவில்லை. 4ஜி டிசம்பரில்தான் அறிமுக மாகும் நிலையிலும் 4ஜி என்று பகிரங்கமாக விளம்பரம் செய்து கொண்டிருக்கும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களை எப்படி முறைப்படுத்தப் போகிறார்கள்? 4ஜி ஏலம் எடுத்த தொலைத் தொடர்பு நிறுவனம் ஐந்தாண்டுகளுக்குள் நகர்ப்புறம் என்றால் 90 சதவிகிதம், கிராமப்புறம் என்றால் 50 சத விகிதம் இணைய வசதி தரும் வகையில் டவர்களை நிறுவ வேண்டும் என்பது விதி. அதாவது, அந்த அளவுக்குச் செய்தால் போதும். அதைக்கூட நிறுவவில்லை என்பது எதார்த்த உண்மை. 4ஜி என்பதே தேவையில்லை. 3ஜி கூட ஒழுங்காகக் கிடைப்பதில்லை என்பதும் எதார்த்த நிலைமை. 3ஜி என்றால் 20எம்பிபிஎஸ் வேகம் இருக்க வேண்டும், ஆனால் உண்மையில் எந்த நிறுவனத்தின் இணைப்பிலும் 5 எம்பிபிஎஸ்கூட கிடைப்பதில்லை. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?

பிராட்பேண்ட் இணைப்பில் முன்னிலை வகிக்க வேண்டிய பிஎஸ்என்எல் – எம்டிஎன்எல் நிறு வனங்களை எப்படி மேம்படுத்தப் போகிறார்கள்? அவற்றின் சேவைத்தரத்தை எப்படி மாற்றப் போகிறார்கள்? நாடெங்கும் இணைப்பைத் தரக்கூடிய இந்த இரண்டு முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களின் மேம்பாடு குறித்து இதுவரை ஏதும் பேச்சே கேட்கவில்லை. டிஜிட்டல் இந்தியா பொதுத் துறையை நம்பியிருக்கப் போவதில்லை என்றால், தனியாரைத்தான் நம்பப் போகிறதா. மேலே குறிப்பிட்டபடி 3ஜி இணைப்பைக்கூட சரியாகத் தராத தனியார் நிறுவனங்கள், கிராமங்க ளுக்கு தரமான இணைப்பைக் கொடுப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அது தவிர, கொள்ளைக் கட்டணம் அதிகமாக இருந்தாலும் எல்லாரையும் தனியாரின் பக்கம் தள்ளப் போகிறார்களா?
edit sep 29 a
இப்போது மைய அரசின் வலைதளங்களின் நிர்வாகம் முழுவதும் நேஷனல் இன்ஃபர்மேடிக்ஸ் சென்டர் என்ற துறையின்கீழ் இருக்கிறது. ஒப்பீட்டில் இத்துறை ஊழலற்ற துறையாக, அரசியல் தலையீடு இல்லாத துறையாக இதுவரை இருந்து வந்திருக்கிறது. என்ஐசி மறுசீரமைக்கப்படும் என்கிறது டிஜிட்டல் இந்தியா திட்டம். அந்த மறுசீரமைப்பின் பெயரால் இதையும் தனியாரிடம் ஒப்படைக்கப் போகி றார்களா? அப்படி தனியாரிடம் போனால், ஆதார் உள்ளிட்ட அனைத்து தரவு களும் தனியாரின் கையில் இருப்பது போல நாட்டின் அத்தனை தகவல்களும் ஆவணங் களும், சேவைகளும் தனியாரிடம் போவது சரியாக இருக்குமா?

இத்தனை கேள்விகளுக்கு இடையில், டிஜிட்டல் இந்தியா போக வேண்டிய பாதை ரொம்ப தூ………ர………ம். ஆரம்பக் கல்வி முதல் மேநிலைக்கல்வி வரை உள்ளிட்ட அத்தியா வசிய சேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து விட்ட இந்த அரசு, கல்வி வசதியில்லாத மக்களுக்கு இதன் பயன்களை எவ்வாறு எட்டச் செய்யப்போகிறது?

எல்லா மக்களையும் எட்டாத வரையில், 4.5 லட்சம் கோடி (!) ரூபாய் முதலீடு நாட்டின் குறிப் பிட்ட பிரிவினருக்கு மட்டும்தானே பயன்பட முடியும். அது யாருக்கு என்பது முக்கியமான கேள்வி அல்லவா….

பி.கு. – இதில் ஒரு விஷயத்தைப் பாராட்டியாக வேண்டும். இந்திக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வரும் அரசு, டிஜிட்டல் இந்தியா வலைதளத்தில் மட்டும் முக்கியமான மொழிகள் அனைத்திலும் விவரங்களைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறது. அந்த மொழியாக்கம் படு அபத்தமாக இருப்பது வேறு விஷயம்.

Reality check: Modi’s Digital India is a long way to go

ஷாஜகான்

 

error: Content is protected !!