சோலார் உபகரணங்களை வாங்க விருப்பமா?

சோலார் உபகரணங்களை வாங்க விருப்பமா?

முதல்வரின் சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 10 ஆயிரம் வீடுகளில் சூரிய மின் சக்தி அமைப்பை நிறுவுவதற்கு தமிழக அரசு மானியம் வழங்க உள்ளது.எனவே இத்திட்டத்தின் கீழ் மேலும் 9,700 பேர் விண்ணப்பிக்கலாம் என்பதும் இதற்க்காக தமிழக அரசின் சார்பில் ரூ.20 ஆயிரமும், மத்திய அரசின் சார்பில் மொத்தத் தொகையில் 30 சதவீதமும் இந்தத் திட்டத்தின் கீழ் மானியமாக வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தமிழக முதல்வரின் மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தில், அனுமதிக்கப்பட்ட சூரியசக்தி உபகரணம் அமைக்கும் நிறுவனங்களின் பட்டியலை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) www.teda.in என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. .
solar energy
பொதுவாக வீடுகளில் 1 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி அமைப்பை நிறுவ தோராயமாக ரூ.1 லட்சம் வரை செலவாகும் எனத் தெரிகிறது.இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 1 கிலோ வாட் மின்சாரத்தில் 4 டியூப் லைட்டுகள், 3 மின் விசிறிகள், ஒரு டிவி அல்லது கம்ப்யூட்டரை இயக்க முடியும்.மத்திய, மாநில அரசுகளின் மானியத்தைத் தொடர்ந்து ரூ.50 ஆயிரம் செலவு செய்தாலே வீடுகளில் இந்த சூரிய மின் சக்தி அமைப்பை நிறுவலாம்.ஒரு கிலோ வாட் சூரிய மின்சக்தி அமைப்பின் மூலம் ஆண்டுக்கு 1,600 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.9,200 வரை சேமிக்கலாம்.

இதையடுத்து இந்த திட்டத்தின் கீழ், சூரியசக்தி உபகரணங்கள் அமைக்கும் நிறுவனங்களை தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை தேர்ந்தெடுத்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் தகுதியான நிறுவனங்களை எரிசக்தி முகமை தேர்வு செய்து, அதற்கான பட்டியலை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.மொத்தம் எட்டு விதமான பிரிவுகளில் இந்த நிறுவனங்களின் பெயர்கள், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் ஒரு கிலோவாட், இரண்டு கிலோவாட், ஐந்து கிலோவாட் மற்றும் 10 கிலோவாட் ஆகியவற்றுக்கான உபகரணங்களை ஐந்து வருட வாரண்டி மற்றும் ஐந்தாண்டு பராமரிப்புடன் அமைக்கும் நிறுவனங்களின் பட்டியலை, www.teda.in என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்க்து.

error: Content is protected !!