சுகப்பிரசவமாகணுமா? அப்ப கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலே பெஸ்ட்! – மத்திய அரசு சர்வே ரிசல்ட்

சுகப்பிரசவமாகணுமா? அப்ப கவர்மெண்ட்  ஹாஸ்பிட்டலே  பெஸ்ட்! – மத்திய அரசு  சர்வே  ரிசல்ட்

என் ஒய்ப்புக்குச் சுகப்பிரசவம் என்று யாராவது சொன்னாலே , அது அதிசயம் என்றாகி விட்டது. அனேகமாக இறுதிக்கட்ட நெருக்கடியில் மட்டுமே ‘சிசேரியன்’ என்ற காலம் மாறிப் போய், இன்றைய பெரும்பாலா னோருக்குப் பிரசவமே சிசேரியன் மூலமாகத்தான் நிகழ்கிறது. அதிலும் நான்கில் ஒருவ ருக்கு சிசேரியன் என்றாகிவிட்டது. சுகப்பிரசவம் குறைந்ததற்கு வாழ்வியல் பழக்கங்கள் ஒரு காரண மாகச் சொல்லப்பட்டாலும், சில பிரசவங்களில் சிசேரியனைத் தவிர்த்திருக்கலாமோ எனத் தோணும். இந்நிலையில் தேசிய குடும்ப நல சுகாதார அமைப்பு 2015–16–ம் ஆண்டுக்கான சுகாதார சர்வே முடிவு களை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங் களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், அரசு மருத்துவமனைகளை விட தனியார் ஆஸ்பத்திரி களில் சிசேரியன் (ஆபரேஷன் மூலம் பிரசவம்) பிரசவம் 2 மடங்கு அதிகம் நடப்பது தெரியவந்துள்ளது.
lady jan 25
அது சரி..ஏன் அதிகரித்துள்ளது இந்த சிசேரியன்?

“தாமதமான திருமணம், நான்கு ஆண்டுகளுக்கு மேல் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுதல், 30 வயதுக்கு மேல் கருவுறுதல், முதல் குழந்தை சிசேரியனால் பிறந்திருந்தால், இரண்டாவது குழந்தை யும் சிசேரியன் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்தல், இறுதிக்கட்ட நெருக்கடியில் மருத்துவமனைக்கு வருதல், உடலுழைப்பு இல்லாத வாழ்வியல் முறை, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை நோய் போன்றவை சிசேரியனுக்கான காரணங்கள்.”

அப்படின்னா எப்போது சிசேரியன் அவசியம்?

“பிரசவத்தின்போது சிரமங்கள் ஏற்படுத்தும் வகையில், வலுவான காரணங்கள் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்ய வேண்டும். பிரசவம் மிக மெதுவாகவும் சிக்கலாகவும் இருந்தால், குழந்தைக்கு இதயத் துடிப்பு குறைந்திருந்தால், தொப்புள்கொடியால் குழந்தைக்கு ஆபத்து நேர்ந்திருந்தால், குழந்தை பெரியதாக இருந்தால், பிரசவ நேரத்தில் சரியான நிலையில் குழந்தை (Position) இல்லாதிருந்தால், கர்ப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், தாய்க்குப் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட் டிருந்தால், கர்ப்பப்பையில் வெடிப்பு அல்லது பிளவு (Uterine rupture) ஏற்பட்டிருந்தால், சிசேரியன் செய்யப்படும்.”

இதனிடையே தான் தேசிய குடும்ப நல சுகாதார அமைப்பின் சர்வே தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவர பட்டியலில், திரிபுராவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் 87.1 சதவீதமும், அரசு மருத்துவமனைகளில் 36.4. சதவீதமும் சிசேரியன் பிரசவம் நடப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல், பீகார் அரசு மருத்துவமனைகளில் 5 சதவீதமும், தனியாரில் 37.1 சதவீதமும், மேற்குவங்காளத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் 74.7 சதவீதமும், அரசு மருத்துவமனைகளில் 37.1 சதவீதமும் சிசேரியன் நடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தமிழகத்தில் 36.1 சதவீதமும், தெலுங்கானாவில் 63.2 சதவீதமும் சிசேரியன் மூலம் பிரசவம் நடக்கிறது.

இந்தியாவில் 10 முதல் 15 சதவீத பிரசவங்கள் மட்டுமே சிசேரியன் முறையில் மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. பிரசவத்தின்போது சிலருக்கு பிரச்சினை ஏற்படுவதாலேயே இயற்கை பிரசவத்தை தவிர்த்து சிசேரியன் பிரசவம் செய்யப்படுவதாக மகப்பேறு மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

error: Content is protected !!