சிறையில் சிறப்பு உணவு-கட்டில், மெத்தையுடன் ’பந்தா’வாக இருக்கும் ஆஸ்ராம் பாபு!

சிறையில் சிறப்பு உணவு-கட்டில், மெத்தையுடன் ’பந்தா’வாக இருக்கும் ஆஸ்ராம் பாபு!

பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சாமியார் ஆசாராம் பாபுவுக்கு, விசேஷமாக சமைக்கப்பட்ட உணவு வகைகளை சிறை காவலர்கள் பவ்யத்துடன் பரிமாறுகின்றனர். அவர் உறங்குவதற்கு கட்டில், மெத்தையும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த தகவல் உறுதி செய்கிறது.

குஜராத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு (வயது 72), ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் வைத்து உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி இரவு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. அவரது புகாரின் பேரில் சாமியார் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆசாராம் பாபுவை இந்தூர் ஆசிரமத்தில் ராஜஸ்தான் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் விமானம் மூலம், சம்பவம் நடந்த ஜோத்பூருக்கு அழைத்து வரப்பட்டார். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் சாமியார் ஆசாராம் பாபு, ஜோத்பூர் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி மனோஜ் கே வியாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் அவரது ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து அவர் ஜோத்பூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஜோத்பூரில் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஆசாராம் பாபுவுக்கு சிறை காவலர்கள் ராஜ உபசாரம் செய்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன.

மற்ற கைதிகள் அனைவரும் சிறை உணவை சாப்பிட்டுவிட்டு, வெறும் தரையில் படுத்து தூங்கும் போது, ஆசாராம் பாபுவுக்கு விசேஷமாக சமைக்கப்பட்ட உணவு வகைகளை சிறை காவலர்கள் பவ்யத்துடன் பரிமாறுகின்றனர். அவர் உறங்குவதற்கு கட்டில், மெத்தையும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த தகவல் உறுதி செய்கிறது.

Asaram Bapu enjoying VIP status in prison: Report

************************************************************
Asaram Bapu, under arrest after he was blamed for sexually assaulting a minor girl, is enjoying VIP status in jail, reports claimed on Wednesday. The controversial godman has been kept alone in a barrack in Jodhpur jail.

Related Posts

error: Content is protected !!