சிரியா மீது இரசாயன ஏவுகணை ? : அமெரிக்கா மறுப்பு!

சிரியா மீது இரசாயன ஏவுகணை ? : அமெரிக்கா மறுப்பு!

சிரியா மீது அன்னிய கப்பலிலிருந்து 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை ரஷிய நாட்டு தொலைகாட்சி ஒன்று உறுதி செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்கப் படையுடன் இணைந்து குண்டு வீசி பயிற்சியில் ஈடுபட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் அந்நாடு மேலும் தெரிவித்துள்ளது.
sep 3 - missile in syriya
சிரியாவில் அதிபர் ஆசாத் படை இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பொதுமக்கள் 1400 பேரை கொன்றது என்று ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதியாக கூறியுள்ளனர். இதனையடுத்து அமெரிக்கா, சிரியாவின் மீது போர் தொடுக்க செனட் சபையின் ஒப்புதலுக்காக அதிபர் ஒபாமா காத்திருக்கிறார். இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து சிரியா நேக்கி ஏவுகணைகள் வீசப்பட்டதாக ரஷ்யாவில் செய்தி வெளியானது. இன்று காலை 10.16 மணியளவில் கிழக்கு கடற்கரை நோக்கி வீசப்பட்ட 2 ஏவுகணைகள் கடலில் விழுந்துள்ளது. இதனை தெற்கு ரஷ்யாவில் உள்ள அர்மாவிர் எச்சரிக்கை மையத்தின் ராடார்கள் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆனால் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ரஷிய தூதரகம் ஏவுகணை தாக்குதலை இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ரஷ்ய தொலைக்காட்சியின் இந்த தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை உயர் அதிகாரி ஒருவர், அன்னிய கப்பலிலிருந்து 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் பெய்யானது என்றார்.

Israel test fires missile amid Syria strike anxiety

****************************************************************
Israel’s Defense Ministry said Tuesday it had carried out a missile test in the Mediterranean sea, apparently explaining news alerts run about an hour earlier after Russia’s radar systems detected two “ballistic objects” fired from the central Mediterranean toward the eastern part of the sea.

error: Content is protected !!