“சிபிஐ சட்டவிரோதமாக செயல்படுகிறது!:- கவுகாத்தி ஹைகோர்ட் அதிரடி

“சிபிஐ சட்டவிரோதமாக செயல்படுகிறது!:- கவுகாத்தி ஹைகோர்ட் அதிரடி

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ சட்டப்பூர்வ அமைப்பு அல்ல என்றும், அதனால் சிபிஐயை காவல்துறைக்கு நிகரான அமைப்பாக கருத இயலாது என்று கவுகாந்தி ஹைகோர்ட் தீர்ப்பளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நவேந்திர குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த கவுகாத்தி உயர் நீதிமன்றம், “முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யும் உரிமை கூட சி.பி.ஐ.க்கு இல்லை எனவும்,சி.பி.ஐ. அமைப்பு உருவாக்கத்திற்கான தீர்மானத்திற்கு இது வரை குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்படவில்லை”எனவும் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் புலன் விசாரணை நடத்தி வரும் அமைப்பு சட்டப்பூர்வமானது அல்ல என்று உயர்நீதிமன்றம் கூறியிருப்பது சட்ட நிபுணர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
nov 8 - c b i
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிந்த நவேந்திர குமார் என்பவர் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில் கிரிமினல் சதித்திட்டம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதை தள்ளுபடி செய்யுமாறு கோரியிருந்தார். மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 1963ம் ஆண்டு சிபிஐ அமைப்பு தொடங்கப்பட்டதாகவும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும் அதிகாரம் சிபிஐக்கு இல்லை என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் அன்சாரி மற்றும் ஷா ஆகியோர் நவேந்திர குமார் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டனர். மேலும் அரசியல் சாசனப்படி இல்லாமல் உள்துறை அமைச்சகத்தின் தீர்மானத்தால் உருவாக்கப்பட்ட சிபிஐ காவல்துறை போல் செயல்பட என்ன அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சிபிஐ சட்டப்பூர்வமாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டிய நீதிபதிகள் நரேந்திர குமார் மீதான வழக்கை தொடர்ந்து விசாரிக்க தடை விதித்தனர்.

CBI is illegal, not created by law: Gauhati HC

**********************************************************
n a significant ruling, the Gauhati high court has declared the Central Bureau of Investigation (CBI), the country’s premier investigating agency, an illegal entity on the grounds that it has not been created by law.Any organisation whose functions curtail personal liberty, through means such as arrest, has to be set up through a legislation, it said.

error: Content is protected !!