சிதம்பரம் கோயிலை தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

சிதம்பரம் கோயிலை தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வாகிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.மேலும் இது குறித்து அரசு பிறப்பித்த அரசாணையையும் கோயிலை நிர்வாகிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி நியமனத்தையும் ரத்து செய்து கோர்ட் உத்தரவிட்டதுள்ளது. அத்துடன் சில முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி கோயிலை அரசு கையகப்படுத்த முடியாது என்றும சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
jan 6 - chidambaram temple
சிதம்பரம் நடராஜர் கோயிலையும், அதன் சொத்துக்களையும் நிர்வகிக்க செயல் அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கோயிலை நிர்வகித்துவரும் பொது தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததையடுத்து, அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எஸ்.ஏ.போப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களும் கடந்த டிசம்பர் 5-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு அளிப்பதை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

முன்னதாக தமிழக அரசு தரப்பில், கோயிலை நிர்வகிக்க செயல் அதிகாரியை நியமித்தது சரியான நடவடிக்கைதான் என்று வாதிடப்பட்டது. அதே சமயம் பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன வாதத்தின் போது, “அரசியல் சாசனம் சட்டம் பிரிவு 26-ன்படி மதம் சார்ந்த அமைப்பை ஏற்படுத்தவும், அதை நிர்வகிப்பதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே, 1952-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில், சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் நிர்வகிப்பதற்கு உள்ள உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இக்கோயிலை பொது தீட்சிதர்கள்தான் நிர்வகித்து வருகின்றனர்.கோயில் நிர்வாகத்தில் ஏதாவது முறைகேடு நடைபெற்றிருந்தால் அதன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அதற்காக கோயிலின் நிர்வாகத்தையே அரசு கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது” என்றார். இந்த வழக்கில் பொது தீட்சிதர்கள் சார்பில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!