சாம்சங் போலி செல்போன்கள் பறிமுதல்!

சாம்சங் போலி செல்போன்கள் பறிமுதல்!

சீனாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த சாம்சங் நிறுவனத்தின் போலி செல்பேசிகள், அதற்கான பயன்பாட்டு பொருள்களை சென்னையில் போலீஸார் அண்மையில் பறிமுதல் செய்தனர். பிரபல நிறுவனங்களின் பெயரில் போலிகளைத் தடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக் குழுவினரின் தகவலை அடுத்து போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். சென்னையைப் போலவே சேலத்தில் சாம்சங் நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட ரூ.23 லட்சம் மதிப்புள்ள போலி செல்பேசிகள், இதர பொருள்களை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
samsung- duplicate 27
சேலத்தில் இது போல் போலி சாம்சங் செல்பேசிகள் விற்பனை செய்யப்படுவது குறித்து திருட்டு விடியோ தடுப்புப் பிரிவுக்கு அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக் குழுவினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக் குழுவின் தென்னிந்தியாவுக்கான பொது மேலாளர் ஆர்.சதீஷ்குமார், மேலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையிலான 8 பேர் குழுவினர் முன்னிலையில், சேலம் திருட்டு விடியோ தடுப்புப் பிரிவு ஆய்வாளர் சிவபாலன் உள்ளிட்ட காவல்துறையினர் உதவியுடன் புதிய பேருந்து நிலைய பகுதி கடைகளில் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள 6 கடைகளில் சாம்சங் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட போலியான சீனா தயாரிப்பு செல்பேசிகள், சார்ஜர்கள், ஹெட்போன், இயர்போன், ப்ளூ டூத் உள்ளிட்ட செல்பேசி தொடர்பான இதர பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்த அனைத்து பொருள்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சின்னத் திருப்பதியைச் சேர்ந்த க.கருப்பசாமி (35), மெய்யனூர் பூ,ராஜிவ் சிங் (25), செவ்வாய்ப்பேட்டை ம.மகாவீர் (29), பள்ளப்பட்டி பெ.பிரபு (29), வீரபாண்டியார் நகரைச் சேர்ந்த ப. நரேஷ் (32), வ.ரமேஷ்குமார் (34) ஆகிய 6 நபர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.23 லட்சம். சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த பொருள்களை மொத்தமாக வாங்கி வந்து, அதில் பிரபல நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டி இவர்கள் விற்பனை செய்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Posts

error: Content is protected !!