சர்வதே தேச பூமி தினம்! – ஏப் = 22

சர்வதே தேச பூமி தினம்! – ஏப் = 22

ர்வதேச புவிதினம் (சர்வதேச பூமி தினம், உலக பூமி தினம்) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும் உலகளாவிய ரீதியில் புவியின் சூழல் மாசடைவதைக் கருத்திற் கொண்டு முதன் முதலாக ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச் சூழலியல் நிபுணரும் செனட்டருமான கேலோர்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ம் தேதியை தேர்ந்தெடுத்து அழைப்பு விடுத்தார்.. அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டு தோறும் இந்நாள் உலகளாவிய ரீதியில் சர்வதேச பூமி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த உலக பூமி நாளுக்கும் ஒரு சோக வரலாறு உண்டாம். 1969-ம் ஆண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு விபத்து நடந்தது. தொழிற்சாலைகள் பலவற்றால் பூமி மாசுபடுவது அப்போது அதிகரித்தது. இதையெல்லாம் கண்டு மனம் வெந்த சில போராட்டக்காரர்கள், 1970-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி, 2 கோடி பேர் கலந்துகொண்ட மாபெரும் பேரணியை நடத்தினார்கள். மனிதர்கள், பூமியை எவ்வளவு சேதப்படுத்திவருகிறார்கள் என்பதை அந்த மக்கள் கூட்டம் எடுத்துச்சொல்லியது. `கேலார்டு நெல்சன்’ என்பவர்தான் அந்தப் புரட்சிப் பேரணிக்குப் பின்னால் இருந்தவர்களில் முக்கியமானவர். அதைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22-ம் தேதியைப் புவி தினமாக அமெரிக்கர்கள் கொண்டாடி வந்தார்கள்.1990-ம் ஆண்டில், ஐ.நா சபையால் ‘புவி தினம்’ அங்கீகரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் அன்று முதல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது என்போருமுண்டு. ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 5ம் தேதியை சர்வதேச சுற்றுச் சூழல் தினமாக அனுசரித்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு ” .இந்த விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும் . இயற்கை மட்டும் விதிவிலக்கா என்ன ? இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி சதா ஓடிக்கொண்டே இருக்கிறோம் . இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது . இதை உணர மறக்கிறோம் . எல்லாவற்றுக்கும் ஒரு விதமான கவர்ச்சி தேவைப்படுகிறது . நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமியைப்பற்றிச் சிந்திக்கக்கூட நமக்கு ” உலக பூமி தினம் ” என்று ஒரு நாள் தேவைப்படுகிறது . பூமியின் முதல் எதிரி யார் ? சந்தேகமே இல்லாமல் மனிதன் தான் . இன்று பூமி இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும் , நம் வாழ்க்கை முறையும்தான் காரணம் .

அறிவியல் என்ற பெயரிலும் , கண்டுபிடிப்புகள் என்ற பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம் . இயற்கையோடு இணைந்த அறிவியலால் மட்டுமே மனித குலத்திற்கு நன்மை ஏற்படும் . இயற்கைக்கு எதிரான அறிவியல் சிறிய நன்மையையும் , பெரிய தீமையையும் கொண்டிருக்கும் . நமது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் இயற்கைக்கு எதிராகவே உள்ளது . இயற்கையின் தன்மைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் அமைவதில்லை . நமது பயன்பாடும் , வர்த்தகமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன . விளைவு , பூமியே ஒரு பெரிய குப்பைத்தொட்டி ஆனதுதான் மிச்சம் .

இன்று நாம் பயன்படுத்தும் பொருள்களில் எத்தனை மண்ணில் மட்கக்கூடியவை . மிகவும் குறைவு . பயன்படுத்தியபின் தூக்கி எறி ( Use and Through ) கலாச்சாரம்தான் இன்றைய உலகை இயக்குகிறது , இந்தக் கலாச்சாரம் பொருள்களுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் தான் . ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து சூழல்தான் இன்று உள்ளது . நிலம் , நீர் , காற்று என்று பாகுபாடில்லாமல் அனைத்தும் மாசடைந்துள்ளது . நம் மீது நாமே குப்பைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு குப்பைகளுடனே வாழ்கிறோம் . நம் வீட்டில் இருப்பது மட்டும் நம் குப்பையல்ல , பூமியில் எங்கு குப்பை இருந்தாலும் அது நம் குப்பைதான் , அதற்கு நாம் மட்டுமே காரணம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்!.

error: Content is protected !!