சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம் -இன்று

சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம் -இன்று

சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் 1976ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இத்தினத்தை கடைபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.உலகின் மொத்த மக்கள் தொகையில், 13 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.ithan muulam தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கௌரவிக்கவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இத்தினம் விசேஷமாக கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக இத்தினத்தில் இவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதும், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துவது போன்றவை நடத்தப் படுகின்றன.
left hand day
இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகளை சில பெற்றோர்கள் குழந்தைப் பருவத்திலேயே வலக்கைக்கு மாற்றுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வர். தற்போது கிராம வட்டாரங்களில் இடக்கைப் பழக்கமென்பது ஒரு வெறுக்கத்தக்க பழக்கமாக இன்றும் காணப்படுகின்றது. இதையடுத்து
இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல். ஆனால், நவீன கால விஞ்ஞான விளக்கங்களின்படி இடக்கைப் பழக்கமுள்ளோர் விவேகத்திறன் கூடியவர்கள் என்று கூறப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ஒபாமா இடது கை பழக்கம் உள்ளவர். இடது கையால் கையெழுத்திட்டே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இவர் தவிர அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜோர்ஜ் புஷ் (சீனியர்), பில் கிளிண்டன், ஜெரால்ட் ஃபோர்ட், ஜேம்ஸ் கார்ஃபில்ட், தொமஸ் ஜெபர்சன், ரொனால்ட் ரீகன், ஹாரி ட்ரூமேன் ஆகியோரும், அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த நெல்சன் ராக்ஃபெல்லர் , ஹென்றி வாலேஸ் ஆகியோரும் இடது கைப்பழக்கம் உடையவர்கள்தான்.

நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி, நெப்போலியன் போனாபர்ட், அவரது மனைவி ஜோசப்பின், ஜூலியஸ் சீசர், மாவீரன் அலெக்ஸாண்டர், தத்துவமேதை அரிஸ்டாட்டில், பிரிட்டன் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த பேடன்பாவெல், கியூபா அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ, விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன், ஃபோர்டு கார் தயாரிப்பு ஆலையைத் தோற்றுவித்த ஹென்றி ஃபோர்டு, இங்கிலாந்து மன்னர்களாக இருந்த 3-வது, 8-வது எட்வர்ட், 2-வது, 4-வது, 6-வது ஜார்ஜ் ஆகியோர் உள்பட வரலாறு படைத்த பலர் இடது கைப்பழக்கம் உடையவர்களே. இவ்வாறு பல பிரபலங்களைக் குறிக்கலாம்.

பொதுவாக சாதாரண ஒரு மனிதனின் பழக்கவழக்கத்திற்கும், குணாதிசயங்களுக்கும் இந்த கைப்பழக்கங்கள் வெகுவாக பாதிப்பை செலுத்துவதில்லை. இருந்தாலும் அண்மைக்கால கட்டங்களில் வலது கை பழக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டுவரும் பொருட்களை இடக்கைப் பழக்கமுள்ளோருக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்பட்டு வருவதையும் நாம் கவனிக்க முடியும். இபபடியான இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலது கைப் பழக்கம் உள்ளவர்களை விட விரைவாக சிந்திக்கிறார்கள் என்பது அவுஸ்திரேலிய விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவாகும். இடது கைப்பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகங்களையும் பயன்படுத்த முடிவதாகவும், விரைவாக தகவல்களை மூளைக்கு அனுப்பிப் பெற முடிவதாகவும் அவர்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிதான் சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் 1976ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இத்தினத்தை கடைபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!