கேப்டன் டி வி-க்கு தடையா?- தே மு தி க செயற்குழு கூட்டத்தில் கண்டனம்!

கேப்டன் டி வி-க்கு தடையா?- தே மு தி க  செயற்குழு கூட்டத்தில் கண்டனம்!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும், பாராளுமன்ற தேர்தல் குறித்தும் கலந்து ஆலோசித்து, சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.அதில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களின் விவரம் இதோ::
DSC_0031
தீர்மானம் – 1
தென்னாப்பிரிக்கநாட்டில்கறுப்பினமக்களின்சுதந்திரத்திற்காகபோராடி 27 ஆண்டுகள்சிறைவாசம்இருந்து,உலகத்தலைவராகஉயர்ந்துள்ளநெல்சன்மண்டேலாஅவர்களின்மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் – 2
வருகின்ற 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் தேமுதிக என்ன நிலை எடுக்கும் என்பதை தமிழக மக்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.தமிழக மக்களின் நலன் கருதியும், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்தை எண்ணியும் பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிடுவது குறித்தும் மற்றும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் எனஅனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தையும் இச் செயற்குழு தேமுதிக நிறுவனத் தலைவரும், கழக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் அவர்களுக்கு ஏகமனதாக வழங்குகிறது.

தீர்மானம் – 3
இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்திய அரசின் சார்பில் எவர் ஒருவரும் செல்லக்கூடாது என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றிய மறுதினமே, இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையை எடுத்துக் கூறும் விதமாக தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து தள்ளி, தமிழ் மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இரட்டை வேடம் போடும் முதலமைச்சர் ஜெயலலிதாவை இச் செயற்குழு வன்மையாக க்கண்டிக்கிறது.

தீர்மானம் – 4
தமிழ்நாட்டில் ஜாதிக் கலவரங்கள் உருவாகாமல் தடுக்கிறோம் என்கின்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு, சர்வாதிகார ஆட்சி நடக்கிறதோ என்று மக்களுக்கு ஐயம் ஏற்படுகின்ற வகையில் தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளது. இதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் – 5
தமிழ்நாட்டில் தொடர்ந்து இருந்து வரும் மின் வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாமல், வாக்களித்து ஆட்சியில்அமரவைத்த தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கில் மின்சாரம் இன்று வரும், நாளை வரும் என்று சொல்லி, ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளாக நிரந்தர தீர்வுக்கு எவ்வித வழியும் காணாமல், மக்களிடம் இருந்து தப்பித்துக கொள்வதற்கு மத்திய அரசின் மீது பழியை சுமத்தி விட்டு, தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் அனைத்து தொழிற்துறையையும் முடக்கி போட்டுள்ள தமிழக அரசை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் – 6
தமிழககிராமங்களில் ஏழை எளிய குடும்பங்கள் மற்றும் கணவனை இழந்த பெண்கள் பலரின் வாழ்வாதாரமாக திகழ்வது ஆடு, மாடு, கோழி வளர்ப்பாகும். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக கோமாரி நோய்க்கு ஏராளமான மாடுகள் பலியாகி உள்ளது. இதன் மூலம் கிராமப் பகுதி மக்களின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மாடுகள் மூலம் தங்களது வாழ்க்கையை நடத்துகின்ற ஏழை எளிய விவசாய குடும்பங்கள் மற்றும் கணவனை இழந்த பெண்கள் ஆகியோர் மாடுகள் இறந்ததன் காரணமாக அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தமிழக அரசு இதன் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 7
கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினையில் முதலமைச்சர் ஜெயலலிதா, கூடங்குளம் பகுதி மக்களுக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது போலவும், ஒரு நேரத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து அதிக அளவு மின்சாரம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கிறார். இவருடைய இந்த செயல் பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் விலாங்கு மீனின் இரட்டை வேட போக்கே இவரிடம் தெரிகிறது. எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினையில் அவருடைய நிலைப்பாட்டை தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் – 8
தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் தொடர்ந்து தாக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும், சிறையில் அடைக்கப்பட்டும் என சொல்லொணாத்துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்ததாக்குதல் மூலம் பலர் பலியாகியும் இருக்கிறார்கள். இலங்கை அரசின் இத்தகைய வரம்பு மீறிய அதிகார போக்கை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. முதலமைச்சர் ஜெயலலிதாவோ மத்திய அரசுக்கு கடிதங்களை மட்டும் அனுப்பிவிட்டு, மீனவர்கள் துயர் துடைக்க வேறு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உலைவைக்கும் இந்தபோக்கை மாநில, மத்திய அரசுகள் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 9

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் கனிம வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக, கடற்கரை தாதுமணல்கள், கிராணைட்கற்கள், ஆற்றுப்படுகைமணல்கள் ஆகியவை இயற்கை நமக்கு அளித்த கனிமவளக் கொடையாகும். ஆனால் தற்போது இந்த கனிம வளங்கள் தனிநபர்களாலும், அரசியல்அதிகாரம் படைத்தவர்களாலும், சமூக விரோதிகளாலும், ஒரு சில தனியார் நிறுவனங்களாலும் ஆளும் கட்சியாக இருப்பவர்களின் துணையோடும், இந்தக் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு வர வேண்டிய கோடிக் கணக்கான ரூபாய் வருவாய் தடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டு மக்களுக்கு சேர வேண்டிய செல்வத்தை சில தனிப்பட்ட முதலாளிகள் அபகரிக்கஅனுமதிக்கும்தமிழகஅரசின் போக்கை இச்செயற்குழு கண்டிக்கிறது.

தீர்மானம் – 10
தமிழ்நாட்டில் லஞ்சமும், ஊழலும் கரை புரண்டு ஓடுகின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தினந்தோறும் லஞ்சம் வாங்கியதாக ஒவ்வொரு பகுதியிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. எந்தவொரு செயல்பாடுகள் அரசின் சார்பில் செய்யப்பட்டாலும் அதில் ஊழல் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, செயின்பறிப்பு எனசட்டம், ஒழுங்கு சீர் கெட்டு போய் உள்ளது.லஞ்சம், ஊழலை ஒழித்திடவும், சட்டம் ஒழுங்கை சீர்படுத்திடவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் – 11

தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்ற செய்தி தொலைக்காட்சிகளுக்கு எல்லாம் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடுநிலையோடும், மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்தும் செய்திகளை ஒளிபரப்புகின்ற, தமிழக மக்கள் விரும்புகின்ற சன் செய்தி தொலைக்காட்சிக்கும், கேப்டன் செய்தி தொலைக்காட்சிக்கும் ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்காமல் உள்ளது. இவ்வாறு பாரபட்சமாக செயல்படும் தமிழக அரசின் இச்செயலை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது.

தீர்மானம் – 12
தமிழ்நாடுசட்டமன்றப்பேரவையின்எதிர்க்கட்சித்துணைதலைவராகவும்,தேமுதிகசட்டமன்றஉறுப்பினராகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அவைத் தலைவராகவும் செயல்பட்டு வந்த பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டு, எழுத்துப்பூர்வமான கடிதத்தை, கழக நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். கழக அவைத் தலைவர் பதவியில் இருந்து விலகியதை இச்செயற்குழு ஏகமனதாக ஏற்றுக் கொள்கிறது. மேலும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு அவைத் தலைவர் என்கின்ற பதவி இனி தேவையில்லை என்ற கருத்து செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவராலும் வலியுறுத்தப்பட்டதன் காரணமாக, தலைமை கழக நிர்வாகத்தில் இருந்த கழக அவைத் தலைவர் என்ற பதவி முற்றிலுமாக நீக்கப்படுவதை இச்செயற்குழு ஏகமனதாக அங்கீகரிக்கிறது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பல்வேறு பதவிகளுக்கு புதியதாக நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கும், நிர்வாகிகளை மாற்றம் செய்வதற்கும், நிர்வாகிகளை விடுவிப்பதற்குமான அதிகாரத்தை கழக நிறுவனத் தலைவரும்,பொதுச் செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இச்செயற்குழு ஏகமனதாக அளிக்கிறது.

error: Content is protected !!