கெஜ்ரிவாலுக்கு இன்று முதல் இசட் பிரிவு பாதுகாப்பு!

கெஜ்ரிவாலுக்கு இன்று முதல் இசட் பிரிவு பாதுகாப்பு!

“எனக்கு எவ்வித பாதுகாப்பும் தேவையில்லை என்று டெல்லி முதல் மந்திரி மறுத்தாலும், அவருக்கு 24 மணி நேர இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ளோம்’ என்று காசியாபாத் போலீஸ் எஸ்.எஸ்.பி. தர்மேந்திர தெரிவித்துள்ளார்.
jan 13 Arvind-Kejriwal_with police
அன்னா ஹசாரேவின் ஜன்லோக்பால் அமைப்பிலிருந்து பிரிந்து அரசியல் கட்சி தொடங்கி டெல்லி ஆட்சியின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறார்.இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அவரும் அவரது மந்திரிகளும் டெல்லி தலைமை செயலகத்தின் வாசலில் மக்கள் சபை கூட்டத்தின் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குறைகளை கூற மனுக்களுடன் குவிந்ததால் இந்த சந்திப்பின்போது எதிர்பாராத விதமாக பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கூட்டத்தை கட்டுப்படுத்தவும் கெஜ்ரிவாலை பாதுகாக்கவும் முடியாமல் டெல்லி போலீசார் திணறிப்போனார்கள். இதனையடுத்து, இந்த முகாமின் நோக்கம் நிறைவேறாமல் அரவிந்த் கெஜ்ரிவாலை போலீசார் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல நேர்ந்தது.இதற்கிடையில், காசியாபாத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தை கடந்த வாரம் சிலர் அடித்து, நொறுக்கி சூறையாடினர். இந்த இரு சம்பவங்களையும் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.

மக்கள் குறை கேட்கும் முகாமை சரியாக திட்டமிட்டு அரசு அதிகாரிகள் முறையாக ஏற்பாடு செய்யாததே இச்சம்பவத்துக்கு காரணம் என பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்தனர். சமூக ஆர்வலர்களில் சிலர், ‘ஒரு முதல் மந்திரிக்கு தர வேண்டிய உச்சகட்ட இசட் பிரிவு பாதுகாப்பு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வழங்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டியளித்த காசியாபாத் போலீஸ் எஸ்.எஸ்.பி. தர்மேந்திர ‘எனக்கு எவ்வித பாதுகாப்பும் தேவையில்லை என்று டெல்லி முதல் மந்திரி மறுத்தாலும், அவருக்கு 24 மணி நேர இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Police to give ‘Z’ security to Kejriwal from today
********************************************************************
Notwithstanding Delhi chief minister Arvind Kejriwal’s stand against taking any security cover, Ghaziabad police have decided to provide ‘Z’ category protection to him from Monday.

Related Posts

error: Content is protected !!