கெஜ்ரிவாலின் கட்சிக்கு வரும் நன்கொடைகள் பற்றி விசாரணை !

கெஜ்ரிவாலின் கட்சிக்கு வரும் நன்கொடைகள் பற்றி விசாரணை !

“ஆம் ஆத்மி கட்சிக்கு வரும் நன்கொடைகள் அனைத்தும் வெளிப்படையானதே. இதனை எங்களது வலைதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். அரசின் இந்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரத்தில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கும் வரும் நிதிகள் குறித்தும் விசாரணை நடத்தவேண்டும்.”என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
nov 11 -_arvind-kejrwal-
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. அக்கட்சி வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதாக அரசுக்கு குற்றச்சாட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. இதனால், ஆம் ஆத்மி கட்சியின் நிதிநிலை குறித்து அறிய அரசு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறினார். இதனால், ஆத்மி கட்சிக்கு புதிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்,””ஆம் ஆத்மி கட்சிக்கு வரும் நன்கொடைகள் அனைத்தும் வெளிப்படையானதே. இதனை எங்களது வலைதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். அரசின் இந்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரத்தில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கும் வரும் நிதிகள் குறித்தும் விசாரணை நடத்தவேண்டும்.

காங்கிரஸ் கட்சியும் அவர்களின் நிதிப்பற்றிய விவரங்களை கொடுக்க வேண்டும். மூன்றில் ஒரு பங்கு நிதி வெளிநாடுகளில் இருந்து வருகிறது. இதை வெளிநாட்டு நிதிகள் என்று அழைக்க முடியாது. இந்திய பாஸ்போர்ட் இல்லாதோர்களிடமிருந்து நன்கொடைகளை நாங்கள் பெறவில்லை. ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடைகள் அளிப்பவர்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கவேண்டும்.

டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 63 ஆயிரம் பேரிடமிருந்து ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ. 19 கோடி ரூபாய் நன்கொடை வந்தது. இதை வழங்கியவர்கள் பெரும்பாலும் முதல் முறையாக நன்கொடை வழங்கியவர்களே. வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடமிருந்து நன்கொடை பெறுவது சட்ட வரம்பிற்கு உட்பட்டே இருக்கிறது.”என்று அவர் கூறினார்.

Probing source of foreign funding to Aam Aadmi Party: Sushilkumar Shinde
*****************************************************************************
The government today said it has ordered a probe into alleged foreign funding of Aam Admi Party (AAP) after it received several complaints on the issue. “Complaints have come to me. We are probing the matter. …From where the funds are coming, from which country, what is the source etc. We are trying to find out all these,” Home Minister Sushilkumar Shinde told reporters here in response to a question on alleged foreign funding of AAP.

Related Posts

error: Content is protected !!