கூகுள் மொழிபெயர்ப்பு வசதியை அடிப்படையாகக் கொண்ட ட்ரான்ஸ்லேட்டர் சேவை!

கூகுள் மொழிபெயர்ப்பு வசதியை அடிப்படையாகக் கொண்ட ட்ரான்ஸ்லேட்டர் சேவை!

ஆப்பிள் போன்ற பல பணக்கார நிறுவனங்கள், தங்களது முக்கிய மென்பொருட்களையும், சேவைகளையும் தனது வடிக்கையாளர்களிடம் அநியாய விலைக்கு விற்று பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், கூகிள் நிறுவனம் மட்டுமே இணைய பயன்பாட்டாளர் களுக்கு தனது பெரும்பாலான சேவைகளை இலவசமாக தந்து கொண்டு இருக்கிறது.கூகுளின் அசைக்க முடியாத Number-1, இடத்தை மைக்ரோசாப்ட், யாஹூ உட்பட மற்ற இணைய உலகின் ஜாம்பவான்களாலும் தோற்கடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் கூகுளின் சேவைத்தரம் மற்றும் இலவச சேவைகளினாலுமே. எப்போதும், எதிலும் இலவசங்களையே அதிகமாக விரும்பும் இந்தியா போன்ற பல நாடுகளில், கூகுளின் ஆதிக்கம் சற்றும் குறையாமல் இருக்கக் காரணமும் கூகுளின் இலவச சேவைகளினால் தான் என்பதை மறுக்கவியலாது.
translate mar 31
குறிப்பாக, இணையதளத்தில் தமிழில் எழுதுவது என்பது குதிரைக்கு கொம்பு முளைக்கும் கதையாகவே இருந்து வந்தது. அதற்காக தமிழ் – தட்டெழுத்து பயிற்சியில் முறையாக தேர்ந்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்த நேரத்தில் கூகுள் அதிரடியாக google transliteration என்ற சேவையை தொடங்கியது.இந்த google transliteration என்பது, நாம் பேச்சு வழக்கில் தமிழில் பேசுவதை – ஆங்கிலத்தில் டைப் செய்யும்போது , அப்படியே தமிழில் மாற்றி தரும். அதாவது ‘வணக்கம்’ என்று நாம் பேச்சு வழக்கில் பேசுவதை ‘vanakkam’ என்று டைப் செய்தால் ‘வணக்கம்’ என்று தமிழில் மாற்றித்தரும். இதன் மூலம் முறையாக தமிழ் டைப்பிங் தெரியாதவர்கள் கூட மிக எளிதாக கணினியில் தமிழில் எழுத முடிந்தது.

ஆரம்பத்தில் இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் கூகுள் அதையும் எளிதாக மாற்றி google transliteration சேவையை ஒரு இலவசமென் பொருளாக மாற்றி நமக்கு தந்தது. அதை நாம் தரவிறக்கம் செய்து நமது கணினியில் நிறுவிக்கொண்டால் இணைய இணைப்பு இல்லாமல் எந்நேரமும் நம் கணினியில் தமிழ் மொழியில் டைப்பிங் செய்யலாம்.

தமிழ் தவிர மலையாளம்,கன்னடம்,தெலுங்கு,ஹிந்தி,பஞ்சாபி,மராத்தி, ஒரியா,குஜராத்தி போன்ற பல இந்திய மொழிகளிலும் கூகுள் இந்த சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.இச்சேவையின் பலனால், இன்றைக்கு இணையத்தில் பிளாக்கர்கள் உட்பட பல தொழில்முறை சார்ந்த எழுத்தாளர்கள் பலரும் google transliteration மென்பொருளைப் பயன்படுத்தி எழுதி வருவது அப்பட்டமான உண்மை!இப்படி எந்த சேவையை எடுத்துக்கொண்டாலும் அதில் தனக்கென ஒரு முத்திரை பதித்து, இணைய பயன்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு தனி அங்கீகாரத்தை தக்கவைத்து கொண்டிருகிறது – கூகுள் நிறுவனம்.

இந்நிலையில் இப்படிப் பல மொழிகளில் மொழிபெயர்க்கும் வசதியை ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறது ‘ட்ரான்ஸ் லேட்டர்’ இணைய‌தளம்.எளிமையாக உள்ள இந்தத் தளத்தில் மேல் பக்கத்தில் மொழிபெயர்க்க விரும்பும் வரிகளை டைப் செய்து விட்டு, கீழே உள்ள பட்டியலில் இருந்து மொழிபெயர்க்கப்பட வேண்டிய மொழியைத் தேர்வு செய்துகொள்ளலாம். அவ்வளவுதான், மொழிபெயர்ப்பு முடிந்தது. ஆனால் நீளமான பத்திகளுக்கு எல்லாம் பொருத்தமாக இருக்காது. சின்னச் சின்ன வாசகங்கள் என்றால் சரியாக இருக்கும். ஒரே நேரத்தில் பல மொழிகளிலும் மாற்றிக்கொள்ளலாம். மிக எளிமையான சேவை. ஆனால் பயன்மிக்கது. கூகுள் மொழிபெயர்ப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஒரு அடிசினல் தகவல் :இந்திய மொழிகளில், மொழிபெயர்ப்பின் ஆரம்பம் ராமாயணத்திலிருந்து துவங்கியது. இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளில், அக்கதை வாய்வழியாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அதை சரியான மொழிபெயர்ப்பு என்று சொல்லமுடியாது. இருந்தாலும், அதுவே மொழிபெயர்ப்பின் ஆரம்பக் காலகட்டம். கம்பர், ராமாயணத்தை அதன் சாரத்தை மாற்றாமலும், தமிழ் மண்ணுக்கான மரபுகளை விலக்காமலும் மொழிபெயர்த்தார். நாளடைவில், மொழிபெயர்ப்பில் நிறைய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அவை அனைத்தும் ஆரோக்கியமாகவே உள்ளன. தமிழில் மொழிபெயர்ப்பு உலகம் நிறைய மாற்றங்களை உள்வாங்கி உள்ளது.

இனி புதிய ட்ரான்ச்லேட்டர் இணையதள முகவரி: http://translatr.varunmalhotra.xyz

சைபர்சிம்மன்

error: Content is protected !!