குழந்தைகளுக்கு கணினி புரோகிராமிங் ஆற்றலை கற்றுத் தரும் ரோபோ!வீடியோ

குழந்தைகளுக்கு கணினி புரோகிராமிங் ஆற்றலை கற்றுத் தரும் ரோபோ!வீடியோ

இது கணனி இணைய யுகம். கல்வி பொருளாதாரம் அரசியல் அனைத்துத் துறைகளையும் இது தன் வயப்படுத்திக் கொண்டு விட்டது. இன்றைய உலகில் கணனி தொழில்நுட்பமானது அனைத்துத் துறைகளையும் பெரிய வளர்ச்சிக்கும் இட்டுச் சென்றுள்ளது. ஒரு காலத்தில் மாணவர்களின் மேற்படிப்புக்காகவே கம்யூட்டர் கல்வி பயன்பட்டது. ஆனால் தற்போது கையடக்கத் தொலைபேசி, வானொலி, இணையம் வந்துவிட்டதால் குழந்தைப் பருவத்திலிருந்தே கணனிக் கல்வி அவசியமாகப் படுகின்றது.
nov 5 - tec child
இதனால் சிறுவயதில் கணனியைப் பயன்படுத்துவதற்கு குழந்தைக்குப் பெற்றோர் உதவி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. எந்தெந்த வயதுகளில் எவ் வகையான தொழில்நுட்ப முறைகளை குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்? அவை எவ்வகையான நன்மைகளை தங்கள் குழந்தைக்கு பெற்றுத்தரும் என்பன போன்ற விபரங்களை பெற்றோர் முதலில் அறிந்திருபபதும் அவசியமாகும்.

இந்நிலையில் எதிர்கால குழந்தைகளின் கணனி புரோகிராம் அறிவை வெகுவாக வளர்க்கும் பொருட்டு வர்ணமயமான ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Play-i எனப்படும் இந்த ரோபோவானது கூகுள், ஆபிள், மற்றும் சைமன்ரெக் நிறுவனங்களை சேர்ந்த சில இன்ஜினியர்களாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதோ வீடியோ லிங்க்::http://www.youtube.com/watch?v=uLDQDaPHy9E

error: Content is protected !!