கிராமம் தான் கோவில்! – ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்

கிராமம் தான் கோவில்! –  ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று 9 இடங்களில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டங்களில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். மக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனங்களை வெல்வோம் என்ற முழக்கங்களை முன்வைத்து தமிழகத்தில் உள்ள 12,617 ஊராட்சிகளிலும் திமுக சார்பில் ‘ஊராட்சி சபைக் கூட்டம்’ நடைபெற உள்ளது. இந்தக் கூட்டங்கள் நாளை (9ம் தேதி) தொடங்கி பிப்ரவரி 17ம் தேதி வரை நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி கூட்டிய கிராம மக்களின் முன்பாக இன்று பேசிய மு.க.ஸ்டாலின், “நான் ஒரு கோவிலுக்கு வந்ததை போன்று உணர்கிறேன். கிராமம் தான் கோவில். மகாத்மா காந்தி கூட கிராமத்தை தான் கோவில் என்று தான் கூறுவார். அரசியலே இதுபோன்ற கிராமங்களில் தான் உருவாகியுள்ளது. கிராமங்கள் தான் நாட்டின் உயிர்நாடி.

மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் லோக்சபா எம்.பிக்கள்.எம்.எல்.ஏக்களால் தேர்தெடுக்கப் படுவார்கள் ராஜ்ய சபா எம்.பிக்கள். எம்.பிக்கள் டெல்லியில் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். ஆனால் அனைத்திற்கும் காரணமான எம்.எல்.ஏக்களை தேர்தெடுப்பது நீங்கள் தான். இதுக்கிடையில் மத்தியில் எம்மாதிரியான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.

தேர்தல் சமயத்தின் போது அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிக்க வருவார்கள். யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீங்கள் தான் சரியாக முடிவெடுக்க வேண்டும். முன்னதாக குடவோலை முறை மூலமாக தான் கிராம சபை கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பர். அதேபோன்று இன்றும் கிராம சபை தான் மக்கள் பிரதிநிதிகளை அடையாளம் காட்டுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் பள்ளிப்பாக்கம்கிராமசபை கூட்டம் மற்றும் குடவோலை முறை நடந்ததற்கான கல்வெட்டு இருக்கிறது. அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டம், கலைஞர் பிறந்த தஞ்சை மாவட்டம் ஆகிய இரண்டிலும் கல்வெட்டு உள்ளது.

கலைஞர் இல்லை என்பதை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. கலைஞர் உங்கள் ஒவ்வொரு வரிடமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. அத்துடன் சட்டமன்றத் தேர்தலும் வரலாம். இதற்கிடையேஇடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலும் வரவிருக்கிறது. எனவே சரியான மக்கள் பிரதிநிதியை தேர்தெடுக்க வேண்டியது உங்கள் கடமை” என்றார்.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

 இந்த ஊராட்சி சபை கூட்டங்கள், புதிய பாணியில் நடத்தப்படுகிறது. இதுவரை தலைவர்கள் மேடையில் அமர்ந்திருப்பார்கள். மக்கள்  தனியாக நாற்காலியிலோ, தரையிலோ இருப்பார்கள். இந்த ஊராட்சி சபை கூட்டம்   மக்களோடு மக்களாக நெருங்கி உரையாடும் வகையில் அனைவரும் தரையில் அமர்ந்து பேசும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மக்களின் பிரச்னைகளை கேட்டு அதற்கு என்ன நிவாரணம் என தலைவர்கள் பதில் அளிக்கும் வகையில் இந்த கூட்டங்கள் நடைபெறும். இதற்காக  தார்ப்பாய் தரையில் விரிக்கப்பட்டு கூட்டங்கள் நடத்தப்படுகிறதாக்கும்

Related Posts

error: Content is protected !!