கிசு கிசுவால் ஆயுள் கூடும்! – ஆய்வுத் தகவல்

கிசு கிசுவால் ஆயுள் கூடும்! – ஆய்வுத் தகவல்

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் செய்யும் காரியங்களில் ஒன்று – கிசு கிசு வை கிளப்பி விடுவது. அல்லது கிசு கிசுவை ரசிப்பது. இந்த கிசு கிசுவால் சிலபல தற்கொலைகளும். கொலைகளும் நடந்துள்ளன என்றாலும் அதற்குரிய க்ரேஸ் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. இதனிடையே ஏதோ ஒரு வேகத்தில் நண்பர்களைப் பற்றி ஒருவரிடம் கேவலமாகப் பேசிவிட்டு, பின்பு பலர் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகுவர். ஆனால் விஞ்ஞானிகளோ அப்படி நீங்கள் இன்னொருவரைப் பற்றி கோள் மூட்டும் கிசு கிசுதான், உங்களை தன்மையாக்கி மனிதராக்குகிறது. மேலும் நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழவும் அது உதவலாம் என்று தெரிவித்துள்ளனர்.
kisukisu
சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு கிசுகிசுக்கள், கோள் மூட்டல்கள் மற்றும் வம்பு பேச்சுகளால் நண்பர்கள் யாரை நாம் நம்புவது? என்று கற்றுக்கொள்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பரிணாம உளவியல் துறை பேராசிரியராக பணியாற்றும் ராபின், கிசுகிசுக்கள்தான் மனிதர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுவதாக தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி இது போன்ற கிசுகிசுக்களால் மனிதனின் மொழிவளம் வளர்ந்திருப்பதாகவும்,கணக்கிடுதலில் ஆர்வம் அதிகரிதிருப்பதாகவும் அத்துடன் தகவல் தொடர்பு வளர்ந்திருப்பதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!