காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள சேனல் 4- க்கும் அனுமதி

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள சேனல் 4- க்கும் அனுமதி

இலங்கைக்கு எதிராகவும், புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுக்கு ஆதரவாகவும் செயற்பட்ட வெளிநாட்டு ஊடகங்களை சேர்ந்த 12 பேருக்கு, காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. நாட்டின் உண்மை நிலைமையை அறிந்து கொள்ளும் நோக்கில் இவர்கள் வரவழைக்கப்படுவதாக இலங்கை அரசு கூறியுள்ளது.
nov 6 - srilanka
இங்கிலாந்து, நார்வே, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களே இவர்களை அனுப்புவதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இவற்றில் சேனல் 4 தொலைக்காட்சி ஊடக நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சேனல் 4 ஆவணப்பட தயாரிப்பாளர் கெல்லம் மெக்ரேக்கு இலங்கை அரசு விசா வழங்கியுள்ளது.

இதற்கிடையில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு வரும் முன்னர் இந்தியாவுக்கு வரும் 14ஆம் தேதி வருகிறார்.
அப்போது, தாமும் டெல்லியில் இருக்கும் வகையில் கெல்லம் மெக்ரே இந்தியாவுக்கான விசாவை கோரியிருந்த போதும் இந்திய அதிகாரிகள் அதற்கு அனுமதியளிக்கவில்லை.

இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள 30 செய்தி நிறுவனங்களுடன் கெல்லம் மெக்ரேக்கு விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையின் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி நிறுவனங்கள் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுடன் இந்தியாவுக்கு சென்று, அங்கிருந்தே இலங்கை மாநாட்டு வருகின்றன. எனினும் தற்போது இந்திய விசா கெல்லம் மெக்ரேக்கு மறுக்கப்பட்டுள்ளதால் அவர் இலங்கைக்கு நேரடியாக வருவதற்கான விசா அனுமதியை கோரவேண்டும் என்று கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

Related Posts

error: Content is protected !!